சினிமா செய்திகள்
முன்னாள் முதல்வரின் பேரனை திருமணம் செய்யும் தனுஷ் பட நடிகை..!

தனுஷ் பட நடிகை மெஹ்ரின் பிர்சாதா முன்னாள் மாநில முதல்வரின் பேரனை அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
நடிகர் தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் மகன் தனுஷ் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மெஹ்ரின் பிர்சாதா. இவர் இயக்குநர் சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தார் என்னும் படம் மூலமாக தமிழில் அறிமுகம் ஆனார். சில தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார்.

நடிகை மெஹ்ரின் பாவ்யா பிஸ்னோய் என்பவரைத் திருமணம் செய்து கொள்ள உள்ளார். பாவ்யா பிஸ்னோய் தாத்தா ஹரியானா மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஜன் லால். பாவ்யாவின் தந்தை தற்போது ஹரியானா காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆக உள்ளார். பாவ்யா-வின் தம்பி சைதன்யா பிஸ்னோய் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வீரர் ஆவார். பாவ்யா பிஸ்னோர் தற்போது ஹரியானாவின் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆக உள்ளார்.
![]()
இப்படிப்பட்ட பெரிய குடும்பத்தில் தான் அடுத்த மாதம் முதல் இணைய உள்ளார் நடிகை மெஹ்ரின். நடிகை மெஹ்ரினுக்கும் பாவ்யா பிஸ்னோய்-க்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.








