தமிழ்நாடு
அதிர்ச்சி சம்பவம்.. மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணிப் பெண் இறந்துள்ளது அவரது உறவினர்களையும், பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பரமனண்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. 8 மாத கர்ப்பிணிப் பெண்ணான சுஜாதா நேற்று இரவு மின் மோட்டார் சுவிட்ச் போட்டுள்ளார்.
மழை காரணமாகத் தண்ணீர் சுவிட்சில் மின் கசிவு ஏற்பட்டு இருந்ததால் எதிர்பாராத விதமாகச் சுஜாதா மீது மின்சாரம் தாக்கியுள்ளது. சுஜாதாவைக் காப்பாற்ற முயன்ற அவரது தந்தை, தாய்க்கும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது செல்லும் வழியிலேயே கர்ப்பிணி சுஜாதா இறந்துவிட்டார்.
நாளை வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் சுஜாதா இறந்துள்ளது, அவரது குடும்பத்தினரையும், பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


















