சினிமா
என்னடா நடக்குது இங்க? கல்யாணம் ஆகாமல் கர்ப்பமான விஜய் பட ஹீரோயின்!

நடிகர் விஜய்யின் நண்பன் படத்தில் நடித்து பிரபலமான இலியானா திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் நிலையில், கர்ப்பமாக இருப்பதாக திடீரென அறிவித்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.
7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடித்த ரவிகிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தில் தமன்னா மற்றும் இலியானா நடித்திருந்தனர். அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் வெர்ஷனான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார் இலியானா.

#image_title
தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த இலியானா பிரியங்கா சோப்ராவின் பர்பி உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்தியில் பெரிய ஹீரோயினாக மாறிவிடலாம் என தென்னிந்திய நடிகைகள் அங்கே படையெடுத்துச் செல்வதை போல ரொம்ப ஆண்டுகள் முன்பாகவே அங்கு சென்றவர் இலியானா.
ஆனால், அவுட்சைடர்ஸ் எப்படியும் நிலைத்து நிற்க முடியாது என்கிற எழுதப்படாத விதி பாலிவுட்டில் இருந்து வரும் நிலையில், இலியானாவுக்கு நன்றாக நடிக்கும் திறமை இருந்தாலும், பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வர முடியவில்லை.
தெலுங்கிலும் சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகள் ஆதிக்கம் அதிகரித்த நிலையில், அங்கும் முன்னணி நடிகையாக வலம் வர முடியாத நிலையில், கிடைக்கும் சிறு சிறு இந்தி படங்களில் நடித்து வருகிறார் இலியானா.

#image_title
36 வயதாகும் நடிகை இலியானா திருமணம் செய்துக் கொள்ளாமல் இருந்து வரும் நிலையில், தான் அம்மாவாக போவதாக ஒரு போஸ்ட் போட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார். இலியானாவின் அந்த ரகசிய காதலர் யார்? என்கிற கேள்வி தான் தற்போது திரைத்துறையில் மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது.
2019ல் புகைப்படக் கலைஞருடன் நெருங்கி பழகி வந்த இலியானா அவரை காதலித்ததாகவும் பின்னர் ஆண்ட்ரூ நிபோன் எனும் அந்த புகைப்படக்கலைஞரை பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது யாருடன் நெருக்கமான உறவில் இலியானா இருக்கிறார் என பலரும் ஆர்வமுடன் இலியானாவின் அந்த பதிலுக்காக காத்திருக்கின்றனர்.