தமிழ்நாடு
கொரோனா முக்கிய அறிவிப்பு -முதல்வர்

கொரோனா பற்றி முக்கிய அறிவிப்பு -முதல்வர்
கொரோனா விழிப்புணர்வு பற்றி இன்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வரும் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள் ,வணிகவளாகங்கள் ,விளையாட்டு அரங்குகள்,விடுதிகள் ,டாஸ்மாக் பார்கள் ,தனியார் உல்லாச விடுதிகள் ,மூட உத்தரவிட்டுள்ளது.எந்த முன்பதிவும் செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் அணைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவிடப் பட்டுள்ளது .அங்கன்வாடி மையங்களும் மூட உத்தரவிடப் பட்டுள்ளது.அங்கன்வாடி குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை அவர்களது குடும்பத்திடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் .10,12 வகுப்புத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்.
ரயில் நிலையங்கள் ,பேருந்து நிலையங்களில் தெர்மல் ஸ்கேனிங் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல கோவில்கள் ,மசூதிகள் ,தேவாலயங்கள் ஆகிய இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .ஊர்வலங்கள் ,மாநாடுகள்,கண்காட்சி நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது .
திருமண மண்டபங்களில் புதிய திருமணம் எதுவும் நடத்த வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது .அதேபோல் மக்கள் சுற்றுலா செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.







