இந்தியா
நாடு அழிவை நோக்கி பயணிக்கும் ஒருவரின் தலைமையை கொண்டுள்ளது: விளாசிய நடிகர் சித்தார்த்!

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று ரத்து செய்தது மத்திய அரசு. இதனையடுத்து அதனை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கியுள்ளது மத்திய அரசு.
இது தொடர்பான மசோதாவின் போது மாநிலங்களவை மற்றும் மக்களவை இரண்டிலும் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. சில கட்சிகள் இதற்கு ஆதரவும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் இந்த காஷ்மீர் விவகாரம் தான் பேசும் பொருளாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் அடிக்கடி சமூகம் மற்றும் அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வரும் நடிகர் சித்தார்த் இந்த காஷ்மீர் விவகாரத்திலும் தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், நாடு அழிவை நோக்கி பயணிக்கும் ஒருவரின் தலைமையை கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை முற்றிலும் திசை திருப்பும் வேலையாகும். இதையெல்லாம் தெரிந்து கொண்டே தான் செய்கின்றார்கள் என பாஜகவையும் பிரதமர் மோடியையும் விமர்சித்துள்ளார்.

















