Uncategorized
கார்டு உங்கள் கையில்…பணம் ஹேக்கர்கள் கையில்! புதிய GHOST TAP மோசடி?

கார்டு உங்கள் கையில்…பணம் ஹேக்கர்கள் கையில்! புதிய GHOST TAP மோசடி?
உங்க கிரெடிட் அல்லது டெபிட் கார்டு உங்க பர்ஸ்ல பத்திரமா இருக்குனு நினைக்கிறீங்களா? இனி கொஞ்சம் உஷாரா இருக்க வேண்டிய நேரம்!
கார்டை கையில் எடுக்காமலேயே, Contactless Technology-ஐ பயன்படுத்தி பணத்தைத் திருட முயற்சிக்கும் புதிய Ghost Tap Scam குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
NFC (Near Field Communication) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த மோசடி எப்படி நடக்கிறது? போலி ஆப்கள் மூலம் கார்டு விவரங்களைத் திருடுவது எப்படி? ஹேக்கர்கள் பயன்படுத்தும் வழிமுறைகள் என்ன?
இந்த மோசடியிலிருந்து உங்கள் வங்கிப் பணத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? Contactless வசதியை எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்துவது?
அடையாளம் தெரியாத திருட்டு நபர்கள் உங்கள் வங்கியின் பெயரிர் உங்களுக்கு மெசேஜ் அனுப்பி வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஒரு செயலியை தரவிறக்கம் செய்ய சொல்லுவார்கள். அது முடிந்தவுடன் உங்கள் கார்டை உங்கள் போனின் அருகில் கொண்டு போக சொல்வார்கள். அடுத்த நிமிடம் உங்கள் வங்கி விவரம் மொத்தமும் எங்கேயோ இருக்கிற திருட்டுக் கூட்டத்தின் கையில் சென்று விடும்.
இன்னொரு முறை எப்படி என்றால் உங்கள் கார்டில் உள்ள சிம் அருகில் உள்ள வைஃபை சிம்பல் டேப் டு பே முறையில் இயங்குகிறது. திருடர்கள் அவர்களின் போனையோ ஸ்கேனரையோ உங்களுக்கு மிக அருகில் கொண்டு வரும்போது உங்கள் கணக்கில் உள்ள பணம் கழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த இரு முறைகளிலும் எச்சரிக்கையாக இருங்கள்.
உங்கள் வங்கி செயலியின் உள்ளெ சென்று டேப் டு பே ஆப்ஷனை ஆஃப செய்து வையுங்கள். உங்கள் கார்டோட RFID சிக்னல்களை தடுக்கிற கவர்களை பயன்படுத்துங்க.
முழு விவரங்களுக்கு இந்த வீடியோவைப் பாருங்க.
https://www.facebook.com/share/v/1EUUkeNLqs/
அசம்பாவிதம் நடக்கும் பட்சத்தில் உடனே உங்கள் வங்கி கிளைக்கு போன் செய்து உங்கள் கணக்கை முடக்குங்கள். 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் உங்கள் புகாரை தெரிவியுங்கள். ஒன்றிய அரசின் இணையதளங்கள் மூலமாக சைபர் கிரைம் புகார் அளியுங்கள். எச்சரிக்கை தேவை…

