இந்தியா
இரவு நேரச் செய்திகள் – 27.11.2026

- ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
- அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், ஈரானிய எரிவாயு ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு துருக்கிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை மீறி, ஆண்டுக்கு 10 பில்லியன் கன மீட்டர் (BCM) ஈரானிய எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை ஈரானும் துருக்கியும் புதுப்பித்துள்ளன
- 2023 அக்டோபர் முதல் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்த மனிதாபிமானப் பணியாளர்களின் எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. இதில் 397 பேர் UNRWA ஊழியர்கள் ஆவர்.
- உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து குறைந்தது 490,334 ரஷ்ய இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக கசிந்த அரசாங்க ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
- திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், [டிச.15]-ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியவர்கள் பட்டியல் வெளியீடு! 1.சாய்குமார்-தலைமைச்செயலாளர், 2.மகேஷ்குமார் அகர்வால் டிஜிபி, 3.ராஜாராம்-அறநிலையத்துறை செயலாளர், 4.விஜய்-அறநிலையத்துறை கமிஷனர், 5.நிஷாந்த் கிருஷ்ணா-மதுரை கலெக்டர், 6.தேவநாதன்-மதுரை எஸ்பி, 7.பொன் சுவாமிநாதன்-அறநிலையத்துறை இணை கமிஷனர், 8.செல்வி-கோவில் செயல் அலுவலர், 9.சண்முகசுந்தரம்-அறங்காவலர் குழு தலைவர், 10.ராஜபாண்டியன்-அறங்காவலர், 11.அழகப்பன்-அறங்காவலர், 12.ரெஜினாதேவி-அறங்காவலர், சித்ரா-அறங்காவலர்.
- 24 மணி நேரத்தில் 11,707 புல்-அப்ஸ்! தென் கொரிய வீரர் படைத்த இந்த உலக சாதனை உடல் வலிமை மற்றும் மன உறுதியின் அபாரமான முயற்சியாக பேசப்படுகிறது.
- ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலி! 1 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களைத் தயார்படுத்தும் பிரிட்டன்! ரஷ்யா – உக்ரைன் போரைத் தொடர்ந்து ஐரோப்பாவின் பாதுகாப்புச் சூழல் மாறிவரும் நிலையில், பிரிட்டன் தனது முன்னாள் ராணுவ வீரர்களை மீண்டும் தொடர்புகொள்ளத் தொடங்கியுள்ளது. சுமார் 1 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களை அணுகி, அவர்களின் தற்போதைய விவரங்களைச் சேகரிக்கும் பணியை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியுள்ளது.

