இந்தியா
காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 23.11.2026

- திரிஷா போட்டியிட்டாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்! கொளத்தூர் இடைத்தேர்தல் குறித்து செல்வப்பெருந்தகை அதிரடி கருத்து!
- ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அதிரடி வேட்டை! 58 அமெரிக்க ட்ரோன்களை வீழ்த்தியதாக அறிவிப்பு!
- தமிழ்நாடு சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பரில் இல்லை. ஜனவரியில் ஆளுநர் உரையுடன் தொடங்க முடிவு.
- இந்தியாவில் பிரபலமான குடிநீர் பிராண்டான Bisleri International நிறுவனத்தின் குடிநீர் மாதிரி, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்யவில்லை என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI தெரிவித்துள்ளது.
- Ford நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜிம் பார்லி, சீன கார் தயாரிப்பு நிறுவனங்களின் வளர்ந்து வரும் ஆதிக்கம் குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சீன நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்களது வாகனங்களை விற்பனை செய்ய அனுமதித்தால், அது அமெரிக்காவின் வாகன உற்பத்தித் துறைக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- ஈரானுடன் உடன்பாடு இல்லாவிட்டால் புத்தாண்டுக்குப் பின் தாக்குதல் மீண்டும் தொடங்கும் — அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
- சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிக்கும்போது துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளைக் கொட்டக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
- சபரிமலை ஆன்லைன் முன்பதிவில் ஆதார் ஓடிபி கட்டாயம் – வராதவர்களுக்கு மீண்டும் அனுமதி இல்லை எனக் கடும் கட்டுப்பாடு!
- 70 கோடி பயனர்களைக் கடந்து சாதனை படைத்த DigiLocker – டிஜிட்டல் இந்தியாவின் மிகப் பெரிய மைல்கல்!
- Tufa Labs நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விக்கிப்பீடியாவின் 1 பில்லியன் பைட் (1GB) தகவல்களை எந்தவொரு தகவலையும் இழக்காமல் வெறும் 105.39 MB அளவிற்குச் சுருக்கியுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்திற்கு tufazip என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 163 மில்லியன் அளவுருக்களைக் (Parameters) கொண்ட Transformer மாடலைப் பயன்படுத்துகிறது. உரைகளில் உள்ள வடிவங்கள் மற்றும் தொடர்புகளை இந்த மாடல் கற்றுக்கொண்டு, தகவல்களை இன்னும் சிறப்பாகச் சுருக்க உதவுகிறது.
- குறிப்பிட்டத் தொகையைச் செலுத்தக்கோரி வங்கியில் இருந்து நகைக்கடன் பெற்றவர்களுக்கு நோட்டீஸ் வரலாம்; அந்த நோட்டீஸுக்கு அச்சப்படத் தேவையில்லை என அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகி ரோஷன் கார்க்கி தெரிவித்துள்ளார்.


