ஆரோக்கியம்
இந்தியாவின் பிஸ்லேரி வாட்டர் பாதுகாப்பற்றது – உணவு பாதுகாப்புத் துறை

இந்தியாவில் பிரபலமான குடிநீர் பிராண்டான Bisleri International நிறுவனத்தின் குடிநீர் மாதிரி, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்யவில்லை என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI தெரிவித்துள்ளது.
முதற்கட்ட ஆய்வில், அந்தக் குடிநீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட Bromate அதிகமாக இருந்ததாகக் கண்டறியப்பட்டு, பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிறுவனம் மேல்முறையீடு செய்ததால், மாதிரி மீண்டும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அங்கும் Polycyclic Aromatic Hydrocarbons (PAHs) எனப்படும் வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டதால், அந்த மாதிரி பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், Bisleri International நிறுவனத்திற்கு எதிராக உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006-ன் கீழ் வழக்குத் தொடர FSSAI அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் Bisleri நிறுவனத்தின் அனைத்து குடிநீர் பாட்டில்களும் பாதுகாப்பற்றவை என்று அர்த்தமல்ல. பரிசோதிக்கப்பட்ட குறிப்பிட்ட மாதிரியைப் பற்றிய நடவடிக்கைதான் இது. அந்த மாதிரி எந்த Batch அல்லது தயாரிப்பு நிலையத்தைச் சேர்ந்தது என்ற விவரம் இதுவரை தெளிவாக வெளியாகவில்லை.


