இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

- மேகமலை ஆக்கிரமிப்பு விவகார வழக்கில் 30 நாட்களுக்குள் கிராம சபைகளை உருவாக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் 5 மாதங்களுக்குள் குழு அமைக்க தமிழக அரசின் இடையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பு
- OBC இடஒதுக்கீட்டிற்கான வருவாய் உச்சவரம்பு தீர்ப்பைச் செயல்படுத்த 2 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை முடிவு செய்யும்போது பெற்றோரின் மாத ஊதியத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு செய்யக் கூடாது எனக் கூறி, OBC இடஒதுக்கீட்டிற்கான வருவாய் உச்சவரம்பு தீர்ப்பை 8 வாரங்களில் செயல்படுத்த வேண்டும் என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது!
- அமெரிக்காவின் நியுயார்க்கில் நடக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான Emmy விருதுகளை வழங்கும்..முதல் இந்தியர் ஆகிறார் விஜய் சேதுபதி!
- பெட்ரோலில் 30%-க்கு மேல் எத்தனால் கலந்திருப்பது கண்டுபிடிப்பு: கர்நாடகா அரசு நடத்திய சோதனை முடிவுகள் வெளியீடு
- கோவை பெரியார் அறிவுலக போலி நூல்கள் விவகாரத்தில் பொது நூலகத்துறை ஜெயந்தி ஐஏஎஸ் பதவி பறிக்கப்பட்டு புதிய இயக்குநராக ஷஜீவனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- நாடு முழுதும் நடப்பாண்டு ரூ.7000 கோடிக்க பட்டாசு வர்த்தகம் நடந்துள்ளது. – வர்த்தகர்கள் சங்கம். சரவெடி பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.
- சர்ச்சைக்குள்ளான அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளன.
- ரூ.200 கோடிக்கு மேல் மதிப்புள்ள கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள புதிய பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்கியது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றம் கட்டுமான கழகம் என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கி அரசாணை வெளியீடு. தனியார் நிறுவனங்களுக்கு கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தங்களிலும் இந்நிறுவனம் பங்கேற்கும் என தெரிவிப்பு.
- கடவுளைச் சந்திக்கப் பட்டினி கிடக்கச் சொன்ன மதத் தலைவர்! 190 குழந்தைகள் உட்பட 191 பேர் பலி… 200 ஆண்டுகள் சிறைத் தண்டனை! கென்யாவில் மத நம்பிக்கையின் பெயரில் நூற்றுக்கணக்கான மக்களைப் பட்டினி கிடக்கச் செய்து உயிரிழக்க வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மதக் குழுவின் தலைவருக்கு 200 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
- ஈரானின் தரைவழிப் பாதைகளையும் கட்டுப்படுத்த முயற்சிக்கும் அமெரிக்கா!

