இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

- காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர முறையீடு! நடப்பாண்டிற்கான காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காததால் தமிழ்நாட்டில் 4 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்பு! காவிரியில் நீர் திறப்பு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை!
- டெல்லி மதுபான கொள்கை வழன்னில் சாட்சியமோ ஆதாரங்களோ இல்லாமல் நுற்றுக் கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த CBI மேல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க டெல்லி சிஙப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
- ரயில்வேயில் இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்! இந்திய ரயில்வே, “Rail Parcel App – Ghar Se Ghar Tak” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. வீட்டிலிருந்தே அனுப்பலாம். முதற்கட்டமாக டெல்லி மும்பை கொல்கத்தா சென்னை அகமதாபாத் ஹைதராபாத் பெங்களூரு புனே உள்ளிட்ட 8 நகரங்களில் நடைமுறைக்கு வர உள்ளது. திட்டம் தொடக்க தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
- பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் அசத்தும் புதிய முயற்சி! இதற்காக நவீன மறுசுழற்சி இயந்திரங்கள் (Smart Recycling Machines) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
- பணமோசடி வழக்கில் BLM பிரேம் குமாருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ₹103 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கிய ED! ரோல்ஸ் ராய்ஸ் பென்ஸ் போர்ஷே ஜாகுவார் உள்ளிட்ட ரூ.7 கோடி மதிப்பிலானசொகுசு கார்கள் பறிமுதல்!
- தமிழ்நாடு அரசு தொடர்ந்து கடன் வாங்குவதால், அச்சம் அடைந்துள்ள அரசு அலுவலர்கள், விருப்ப ஓய்வு கேட்டு அதிகளவில் விண்ணப்பம் அளித்து வருகின்றனர்.
- முரசு புயலின்போது மாயமான காசிமேடு மீனவர்கள் 9 பேரில் 4 பேரின் உடல்கள் ஆந்திரக் கடற்கரையில் கரை ஒதுங்கின! மீதமுள்ள 5 மீனவர்களின் நிலை என்ன என்பது குறித்து ஆந்திரா மற்றும் தமிழகக் கடலோரப் பகுதிகளில் தேடுதல் பணி தீவிரம்.
- 2015 ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி அல்லது அதற்கு முன்பாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு பாஸ்போர்ட், விசா விதிகளில் தளர்வு!
- ரயிலில் கூடுதல் Luggage எடுத்தா இனி 6 மடங்கு அபராதம்! AC 1st – 70 Kg, AC 2nd – 50 Kg, AC 3rd / Sleeper – 40 Kg, General – 35 Kg மட்டுமே அனுமதி!
- ஆன்லைன் கட்டண சிக்கலால் எம்பிபிஎஸ் இடத்தை இழந்த மாணவிக்கு மீண்டும் வாய்ப்பு: ஐகோர்ட் கிளை உத்தரவு!
- தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ₹20 லட்சம் வரை அபராதம்! வாடிக்கையாளர்களின் புகார்களை முறையாகக் கையாளாமல் இருப்பது, புகார்களைத் தவறாக முடித்து வைப்பது மற்றும் மேல்முறையீடுகளைச் சரியாகக் கையாளாதது போன்ற விதிமுறை மீறல்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிதி அபராதம் விதிக்கப்படலாம். ஒரு சேவைப் பகுதிக்கு ஒரு காலாண்டில் அதிகபட்சமாக ₹20 லட்சம் வரை அபராதம் விதிக்க TRAI விதிமுறைகள் வழிவகுக்கின்றன.
- புதிய வாகனக் காப்பீட்டு விதிமுறைகள் டிசம்பர் 15 முதல் புதிய வாகனக் காப்பீட்டு விதிமுறைகள். வாகனக் காப்பீடு 4 பிரிவுகளாக பிரிப்பு. சொந்த வாகன சேத காப்பீடு இனி கட்டாயமில்லை – விருப்பத்தேர்வே. பயணிகளுக்கான தனிநபர் விபத்து காப்பீடும் விருப்பத்தின் பேரிலேயே. பிரீமியம் தொகையை தனித்தனியாக காட்ட உத்தரவு. புதிய, பழைய வாகன புதுப்பித்தலுக்கும் இவ்விதிகள் பொருந்தும். மூன்றாம் தரப்பு காப்பீடு மற்றும் உரிமையாளர் விபத்து காப்பீடு இனி கட்டாயம்
