இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

- டாஸ்மாக் ஊழியர்களுக்கு நவம்பர் 15 முதல் சீருடை அணிதல் கட்டாயமாகிறது. ”3 செட் சீருடைக்கு தலா ரூ.2000 வீதம் ரூ.6000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். மேற்பார்வையாளருக்கு லைட் புளு சட்டை நேவி புளு பேண்ட் துணை விற்பனையாளருக்கு புளு சட்டை டார்க் புளு பேண்ட் இடது நெஞ்சில் டாஸ்மாக் லோகோ இடம்பெறும்.”
- ஈரானை முழுமையாக அழிப்பதே தீர்வு என டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை! மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்த போர் பதற்றம்.
- தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறும் மனுவின் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட துறையின் தகவல் அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் – மாநில தகவல் ஆணையர்.
- ரஷ்யாவின் சிவில் மற்றும் பொருளாதார உட்கட்டமைப்புகள் மீது உக்ரைன் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு மேலைநாடுகள் ஆதரவளித்து வருவதற்குக் காரணமான, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் சொத்துக்களை கையகப்படுத்தி அவற்றின் ரஷ்யக் கிளைகளை தற்காலிக நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.
- போலி ஆவணங்கள் அல்லது ஆள்மாறாட்டம் மூலம் சிம் கார்டு வாங்குவதும் ஒருவரது பெயரில் வாங்கிய சிம் கார்டை மற்றவருக்கு விற்பதும் சட்டவிரோதம். இதை மீறினால் ரூ.50 லட்சம் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். – தொலைத் தொடர்புத் துறை









