இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

- காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கபினி அணை முழுக் கொள்ளளவு எட்டுவதால் தமிழ்நாட்டுக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.
- தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடலோர ரயில்பாதை திட்டங்கள் இப்போது மீண்டும் தொடங்கப்படுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. அவை.1.சென்னை முதல் கடலூர் வரையிலான கடலோர ரயில் பாதை திட்டம் 2.நாகப்பட்டினம்-திருக்குவளை-திருத்துறைப்பூண்டி ரயில் பாதை திட்டம் 3.மன்னார்குடி-பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டம்
- ஆகஸ்டு 23 முதல் இந்தியாவில் இன்ஸ்டாகிராம் தடை செய்யப்படுவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலனை.
- அரசு மற்றும் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைத் தடுக்க மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) சட்டம், 2024 ன் கீழ் முக்கியத் தண்டனைகள்: வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டால் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை. ரூ. 1 கோடி வரை அபராதம். தேர்வை நடத்தும் அமைப்புகள் குற்றத்தில் ஈடுபட்டால் முழு செலவும் அவர்களிடமிருந்தே வசூலிக்கப்படும்













