இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.07.2026

- அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுமா என்பது குறித்து ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இந்தியாவின் மிக பெரிய அணுமின் நிலையமான கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான பல முக்கியமான மற்றும் சென்சிடிவ் டேட்டா டார்க் வெப்பில் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், ஹேக்கிங் மூலம் டேட்டா திருடப்பட்டதை ரிலையன்ஸ் உறுதி செய்துள்ளது
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் 38,866 மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள், மத்திய தகவல் ஆணையத்தில் (Central Information Commission – CIC) இதுவரை தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை திறப்பத குறித்து 3 வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
- தமிழ்நாட்டில் அதிக செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளத்தை விற்பனை செய்ய தடை. கலர் அப்பளத்தை அடிக்கடி சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை.
- உளுந்து, அரிசியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அப்பளத்தை விற்க தடையில்லை – உணவு பாதுகாப்புத் துறை.
- வங்காள தேசத்தில் மாணவர்களை “பண்ணைக் கோழிகள்“ என்று கேலி பேசிய கல்வி அமைச்சரைக் கண்டித்து அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி “பிராய்லர் சிக்கன் பார்ட்டி“ என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளனர்.
- கர்நாடகா ஆந்திரா கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ளதை போன்று ரெஸ்டாரண்ட் வித் பார் “ரெஸ்டோபார்“ என சொல்லப்படும் உணவகத்துடன் கூடிய மதுபான கூடத்திற்கு தமிழ்நாட்டிலும் அனுமதி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்.
- தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1 முதல் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அலுவலர்கள் 33 கேள்விகளுடன் வீடு தேடி வருவர் என்றும் நாளை முதல் ஜீலை 31 வரை பொதுமக்கள் இணையதளத்தில் தாங்களாகவே விவரங்களை பதிவு செய்யலாம் என்றும் கணக்கெடுப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
- நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.















