இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.05.2026

- தமிழ்நாடு சட்டப்பேரவையில் இப்போது 4 எம்எல்ஏ பதவிகள் காலியானது. திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் பெருந்துறை ஆகியவையே அந்த நான்கு தொகுதிகள். சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 லிருந்து 230 ஆக குறைந்தது.
- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு மாதங்களுக்குள்ளாகவே வழக்க முடிக்கப்பட்டு குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி தீர்ப்ப.
- மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் உத்தரவு!
- 2026 தேர்தலில் குழந்தைகளை பயன்படுத்தி முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா? என்பதை ஆய்வ செய்து அறிக்கை சமர்ப்பிக்க கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.
- சிறு குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெற்ற ரூ.50000 வரையிலான பயிர்கடனை தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவு. இதன் மூலம் அரசுக்கு ரூ.2044.46 கோடி கூடுதல் செரவினம் ஆகும். 14.22 லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள். 01.05.2025 முதல் 28.02.2026 வரை வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்களுக்கு மட்டுமே பொருந்தும்.












