இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

- உலகப் போர் தொடங்கிவிட்டது… எச்சரிக்கை கொடுக்கும் அமெரிக்க முதலீட்டு நிபுணர் ரே டாலியோ!!
- 6 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளை வைத்து தனியார் பள்ளிகளைத் திறந்து லாபம் ஈட்டு வதற்கு தொழிலதிபர்களுக்கு சீனா தடை விதித்துள்ளது. கல்வி ஒரு தொழிலாக இருக்க முடியாது என்றும் அடிப்படைப் பள்ளிகள் மூலம் பணக்கார்ர் ஆக முடியாது என்றும் கூறியுள்ளது.
- நாளை மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் கூடாது! – தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் – தமிழ்நாடு முழுதும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. வாகனப் பிரச்சாரம் பொதுக்கூட்டங்கள் டிஜிட்டல் முறையிலான பிரச்சாரம் செய்யவும் தடை. வாக்காளர் அல்லாதோர் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்.
- விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் ரூ.100 கோடி அளவுக்கு சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடானது. விஜய்க்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்.– சென்னை உயர்நீதிமன்றம்.
- தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முயற்சி. கிள்ளியுரில் 4 தாலக்காக்களில் அணுக்கனிமங்களை வெட்டி எடுக்க ஒன்றிய அரசின் IREL நிறுவனம் கடற்கரை ஒழுங்காற்று மண்டல CRZ அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. அணுக் கனிமங்களை வெட்டி எடுக்க மக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என 2025ல் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.
- இனிமேல் HSRP நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் வாகன புகை பரிசோதனை சான்றிதழை பெற முடியாது என்றும் 10000 ரூபாய் வரை அபராதம் விதிக்கபடலாம் என்றும் போக்குவரத்துத்துறை தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

















