இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.03.2026

- திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினால் வழக்கு முடித்து வைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
- இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல். ஜெருசலேமில் நடந்த தாக்குதலை பார்வையிட்டார் நெதன்யாகு.
- இன்று மார்ச் 3ம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. திருப்பதி கோயில் நடை காலை 9 மணிக்கு மூடப்பட்டு மாலையில் கிரகணம் முடிவு பெற்ற வுடக் சுத்திகரிப்புக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
- இறைச்சிக் கடைகளில் ஆடு மாடுகளை வெட்டுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
- பிளஸ் 2 தேர்வு நேற்று தொடங்கியது. 8 லட்சத்து 6370 போர் தேர்வெழுதினர். 9919 பேர் ஆப்சென்ட்.
- ஈரானில் போர் காரணமாக அங்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாக்கமங்கலம் கிராம மீனவர்கள் 30 பேரை பாதுகாப்பாக தாயகம் மீட்டுவர அவர்களின் குடும்பத்தினர் நேற்று கலெக்டரிடம் உருக்கமான மனு ஒன்றை அளித்தனர்.
- இந்தியா – கனடா இடையே யுரேனியம் விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பிாதமர் மோடி மற்றும் மார்க் கார்னி முன்னிலையில் கையெழுத்தானது.
- சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தேவசம்போர்டு முடிவு.
- தண்டவாளம், மின்சார பாதைக்கு அருகில் பட்டம் விட்டால் கைது. உயரழுத்த மின்சாரத்தால் உயிருக்கு ஆபத்து – ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை
- வளைகுடா போரால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை – பெர்ரோலிய அமைச்சகம்.
- வளைகுடா நாடுகளில் பணிபுரியும் 1 கோடி இந்தியர்களை மீட்கும் பணி தொடக்கம். – இந்திய அரசு அதிரடி அறிவிப்பு.












