இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 19.02.2026

- பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு – அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடலடியில் அதிவேக ஃபைபர் ஆப்டிக் கேபிள் பதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒளியின் வேகத்தில் இணைய சேவைகள் கிடைக்கும்.
- அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களுக்கு சலுகை காட்டுவதும் சுயநலமாக செயல்படுவதும் ஜனநாயக விரோதமானவை என ஊச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
- ஏஐ தொழில்நுட்பம் ஏற்படுத்தி வரும் மாற்றங்களுக்கு இந்தியர்கள் ஈடுகொடுக்கும் வகையில் தயாராகும் விதமாக ஒன்றிய அரசு ஒரு நல்ல தீர்வாக தனது “ஸ்வயம்“ இணையதளம் மூலம் மாணவர்களும் பழைய அரசு பணியாளர்களும் இலவசமாக ஏஐ கல்வி பயில வசதி ஏற்படுத்தி உள்ளது.
- 10 நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு 3 முறை வர இருக்கிறார். மார்ச் 1ல் மதுரை 7ல் வேலூர் மற்றும் 11ல் திருச்சிக்கு வருகை தருகிறார்.
- தஞ்சாவுர் மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணமல்ல என சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தகவல். வார்டன் சகாயமேரி தனது அலுவலக பணிகளை மாணவியை செய்ய வைத்தால் ஏற்பட்ட மன அழுத்தமே காரணம் எனவும் தெரிவிப்பு









