இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.02.2026

- கண்களுக்குப் புலப்படாத மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இடம்பெற்றுள்ளது குறித்த எச்சரிக்கை வாசகங்களை குடிநீர் பாட்டில்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு
- இன்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து கிராம் ரூ.14250க்கும் சவரன் ரூ.114000க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 காசுகள் சரிந்து ரூ.90.70 ஆக நிர்ணயம்.
- திருவள்ளுர் கும்மிடிப்பூண்டியில் மிட்சுபிஷி நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். ரூ.2091 கோடி முதலீட்டில் 2104 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய விதி – முன்பு டெஸ்ட் போட்டியின் ஒரு நாள் முடிவில் கடைசி ஓவரில் ஒரு விக்கெட் விழுந்தால் அம்பையர்கள் உடனே அந்த நாளை முடித்து விடுவார்கள். புதிய விதிமுறையின்படி கடைசி ஓவரில் விக்கெட் விழுந்தாலும் அந்த ஓவர் நிறுத்தப்படாது. 6 பந்துகள் முடிந்த பிறகே நாள் முடியும்.













