Connect with us

கட்டுரைகள்

ரெவின்யு ஸ்டாம்ப் உபயோகிப்பலரா நீங்கள்? அதை எப்படிஎல்லாம் உபயோகிக்கக் கூடாது தெரியுமா?

Published

on

இந்த ரெவின்யூ ஸ்டாம்புகள் இந்தியாவில் இரண்டே இரண்டு விஷயங்களுக்கு மட்டுமே உபயோகிக்கப் படுகிறது.

1) புராமிசரி நோட் கடன் வாங்கும்போது, கடன் வாங்கியவர் எழுதிக் கொடுக்கும் புராமிசரி நோட்டில் இந்த ஸ்டாம்பை ஒட்ட வேண்டும்.

2)எந்த பணத்தையாவது யாரிடமிருந்தாவது வாங்கும்போது அதற்கான ரசீது கொடுக்க வேண்டுமென்றால், அப்போதும் அந்த ரசீதில்  ரூ.2/- ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி, ரசீதை கொடுக்க வேண்டும்.

ரசீது (Receipts):

மாதச் சம்பளம் வாங்குபவர் இதை அதிகமாக உபயோகிப்பார்கள். அலுவலகங்களில் ரசீது கொடுக்கும்போது இந்த ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிய ரசீதை கொடுப்பார்கள். மத்திய அரசின் சட்டப்படி, ரசீதுகளுக்கு (Receipts), அதாவது யாரிடமாவது எதற்காகவாது பணம் வாங்கினால், அதை ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுக்கும் ரசீதுகளுக்கு, இந்த சட்டப்படி ரூ.2/- மதிப்புள்ள ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதுவும், அந்த பணமதிப்பு ரூ.5,000/-க்கு மேல் இருந்தால் அந்த ரசீதில் ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதற்கு குறைவான மதிப்புள்ள தொகைக்கு ரசீது கொடுத்தால், அதற்கு ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்டத் தேவையில்லை. வெறும், ஸ்டாம்ப் இல்லாத ரசீதை கொடுக்கலாம். (இதற்கு முன்பு இருந்த பழைய சட்டப்படி ரூ.500/-க்கு மேல் உள்ள தொகைக்கே 20காசு ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதனால், ரெவின்யூ ஸ்டாம்ப் அதிகமாக புழக்கத்தில் இருந்தது.)

ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய ரசீதுக்கு, அதை ஒட்டாமல் வாங்கி இருந்தாலும், பரவாயில்லை. எங்காவது அதை சாட்சியமாக கொடுக்க நேர்ந்தால் அப்போது அதற்கு ரூ.10/- அபராதமாக கட்டி அதை சரிசெய்தும் கொள்ளலாம். சட்டப்படி அது செல்லும்.

புராமிசரி நோட்டு கடன் (Promissory Note):

புராமிசரி நோட் கடனுக்கு, கடன் எவ்வளவு தொகையாக இருந்தாலும், (கோடிக்குமேல் இருந்தாலும்), ஒரு ரூபாய் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால் போதும். (அந்தச் சட்டத்தின்படி வெறும் 25 காசு ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால் போதும் என்று சட்டம் சொல்லி உள்ள போதிலும், அவ்வாறான 25 காசு ஸ்டாம்புகளை அரசு அச்சடிக்கவில்லை. எனவே ஒரு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி எழுதி வாங்கிக் கொள்ளலாம்.) இந்த ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டாமல் வாங்கிய புரோநோட்டு சட்டப்படி செல்லாது. எந்த கோர்ட்டிலும் வழக்கும் போடவும் முடியாது. அபராதம் கட்டினாலும் அதை ஏற்க முடியாது. எனவே புரோநோட் விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா3 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா3 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா3 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்4 நாட்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

இந்தியா7 நாட்கள் ago

சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

இந்தியா7 நாட்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

Translate »
Je důležité, aby dívky a rodiče měli informace o normálním průběhu ⁢puberty a jak se přizpůsobit změnám. Qualcosa di insolito sta accadendo nell’ecosistema dei pudgy penguins. © 2026 international organic company (ioc sp.