Connect with us

கட்டுரைகள்

கொடைக்கானல் குணா குகை – உயிரோடு வைக்கும் பிணவறை

Published

on

ஊட்டியில் ஆங்கிலேயர்கள் அதிகம் குடியேறினர். ஊட்டிக்கு ரயில் பாதையே நிர்மாணம் செய்தனர். ஆனால் கொடைக்கானலில் அதை அவர்களால் செய்ய முடியவில்லை. ஏன் ? இன்று வரை அதை யாரும் செய்ய முடியும் என்று  நினைத்து கூட பார்ப்பதில்லை. கொடைக்கானலில் ஆங்கிலேயர்கள் அதிகம் குடியேறவில்லை. ஏன் தெரியுமா ? இரக்கமில்லாத பள்ளங்கள், குகைகள்,இருட்டு தான் காரணம்.

தமிழகத்தில் ஆபத்தான மலைவாசஸ்தலம் என்றால் அது கொடைக்கானல் தான். 1850 ஆண்டு வாக்கில் அமெரிக்க மிஷனரிகளை மட்டும் தான் கொடைக்கானல் சற்று ஆரத் தழுவி கொண்டது, ஆனால் அவர்களாலும் பெரிதாக தாக்குப் பிடிக்க முடியவில்லை. மஞ்சு மூடும் கொடைக்கானலின் அதே அழகு தான் அதிக ஆபத்தான பகுதியாக கொடைக்கானலை வைத்திருக்கிறது.

தற்போது ‘குணா’ குகை என்று அழைக்கப்படுகிற குகைக்கு ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் ‘டெவில்ஸ் கிச்சன்’ (சாத்தானின் சமையலறை). மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் காட்டப்படுவது போலப் பல உயிர்களைப் பலி வாங்கிய அந்தப் பகுதியில் ‘குணா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்க, பின்பு ‘குணா கேவ்’ எனப் பெயர் மாற்றம் அடைந்திருக்கிறது.

இந்த பாறைகள் எல்லாம் எதோ நேற்று உருவானது அல்ல. பல மில்லியன் ஆண்டுகளாக உருவானவை. மழை பெய்து நீர் பாறையில் பல லட்சம் ஆண்டுகளாக பாய்ந்து வழ வழப்பு ஏற்பட்டு பாறைகள் இரண்டாக பிளந்து உள்ளே பல மடிப்புகள் ஏற்பட்டதன் விளைவே தற்போதையை வடிவத்தில் இருக்கும் Pillars Rock. இதற்கு சிக்கலான புவியியல் அம்சமங்கள் உள்ளன.

கொடைக்கானலிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மொயர் பாயின்ட் சாலையில் அமைந்துள்ள குணா குகைகள், வழிநெடுக தேவதாரு மரங்களாலும் குன்றுகளாலும் சூழப்பட்டது. 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தக் குகைகள், பயணிகளைக் கூட்டம் கூட்டமாக ஈர்ப்பதற்கு ‘குணா’ படத்தினை தாண்டி அதில் நிறைந்திருக்கும் ஷோலா மரங்களின் முறுக்கப்பட்ட பின்னிப் பிணைந்த வேர்கள் பயணிகளுக்கு மர்ம உணர்வைத் தருகின்றன.

குணா போன்ற குகையில் விழும் நபர்கள் எவ்வாறு இறப்பார்கள் என தெரியுமா ? உடனே மரணம் நிகழ்ந்து விட்டால் ஒன்றும் தெரியாது. ஆனால் இவர்கள் உள்ளே விழும் போதே தலை,முதுகு,கை,கால்  என பாறையில் நொறுங்கி  தான் உள்ளே விழுவார்கள். அப்போதே பாதி உயிர் இருக்காது. சுய நினைவு திரும்பும் போது வெளிச்சமே இல்லாத இருட்டில் வௌவால் சத்தங்களுடன் குடலைப் பிடுங்கும் நாற்றத்துடன் தான் இருக்கும். காரணம் பாறையில் படிந்த பாசிகள்  உருவாக்கும் வாடையில் வௌவால் எச்சமும் கலந்து அது ஒரு இருட்டு பிணவறை போல் தான் இருக்கும்.

உங்களால் கத்தவும் முடியாது. அப்படியே கத்தினாலும் மேலே கேக்காது. உறைய வைக்கும் குளிரில் உணவும் தண்ணீரும் இல்லாமல் நரக வேதனை அனுபவித்தே சுமார் நான்கு ஐந்து நாட்களில் இறந்து போவார்கள்.

பாதி உயிர் இருக்கும் போது அந்த மூன்று நான்கு நாட்கள் கண் முன் நாம் இருப்பது உண்மையா அல்லது கனவா அல்லது இறந்து நரகத்திற்கு வந்து விட்டோமா என்ற பித்துப் பிடித்த மனக்குழப்பத்தில் தான் கடைசி உயிர் பிரியும்.

உள்ளே விழுந்த உடலை யாராலும் மேலே கொண்டும் வர முடியாது. உறைய வைக்கும் குளிர் என்பதால் உடல் உடனே மக்கிப் போகவும் செய்யாது. உடல் சொத சொத என ரெட் வெல்வெட் கேக் போன்று இருந்து சில வாரங்கள் பிறகே உடல் மக்கி வெறும் எலும்பு கூடு மட்டும் மிஞ்சும்.

வனத்துறை அங்கே வரும் சுற்றுலாப் பயணிகளிடம்  இவ்வளவு கறாராக இருப்பதில் தவறே இல்லை. தற்கொலை எண்ணம் உள்ளவர்களை விட்டுவிடலாம். ஆனால் வம்படியாக அந்த குகைக்குள் அப்படி என்ன தான் இருக்கு ன்னு ஊளை விட்டு கத்திட்டே அறியாமல் விழுந்து ரணக் கொடூரமாக அடிபட்டு இறப்பதற்கா நாம் இந்த பூமியில் பிறந்துள்ளோம் ?

மனிதர் உணர்ந்து கொள்ள இது சாதாரண குகைகள் அல்ல. அதையும் தாண்டி கொடூரமானது…..

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்13 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்13 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு14 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்14 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.