இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 19.01.2026

- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் முடிந்தது. 13 லட்சத்து 3487 பேர் புதிதாக விண்ணப்பம்.
- ஓசூரைச் சுற்றியுள்ள வான்பகுதி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் உள்ளதால் பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- சிஎம்சி மருத்துவர் விடுதியில் போதைப்பொருள் இருந்ததால் அவரை கைது செய்ய கேரளா செல்லும் தமிழ்நாடு போலீஸ்
- சாவா இந்தி திரைப்படம் பிரிவினைக்கான படம்தான் என்று ஏ.ஆர்.ரகுமான் சொல்லியிருந்ததற்கு பாஜகவினர் கடும் கண்டனம்.
- சபரிமலையில் இருந்து தங்கம் திருடப்பட்டது நிரூபணம் – விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் நடத்திய சோதனையில் உறுதி.
- முதியோர்களை பரிதவிக்க விடுவதால் இந்த குளிர்காலத்தில் நுரையீரல் பாதிப்பு சளி காய்ச்சல் மாரடைப்பு என பல்வேறு காரணங்களால் அதிக அளவில் உயிர் துறக்கின்றனர் – முதியோர் இல்லங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தகவல்
- திருவள்ளுர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியில் ஓடும் கூவம் ஆற்றில் 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகளை அப்பகுதி இளைஞர்கள் மீட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
- மேற்கு வற்கத்தில் பரவிவரும் நிபா வைரஸ் எதிரொலியாக தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல் – பதநீர் மற்றும் பறவை கடித்த பழங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தல்


