Connect with us

இந்தியா

பிறப்பு சான்றிதழ் தொலைந்து விட்டதா? பெயர் திருத்தம் செய்வது எப்படி?

Published

on

பிறப்பு சான்றிதழ் என்பது ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்யும் மிக முக்கியமான சட்ட   ஆவணம் ஆகும்.. இதில் பெயர் அல்லது எழுத்துப் பிழைகள் இருந்தால், கல்வி, வேலை, பாஸ்போர்ட், திருமணம் போன்ற பல்வேறு நிலைகளில் எதிர்காலத்தில் சட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், பிறப்புச் சான்றிதழில் உள்ள பிழைகளை உரிய முறையில் திருத்துவது அவசியமாகிறது.

பிறப்பு சான்றிதழ் பெறுவது என்பது சமீப காலமாகவே ரொம்ப எளிமையான விஷயமாகி விட்டது.. குழந்தை பிறந்ததும், அந்த தகவலை மருத்துவமனை அல்லது செவிலியர் நகராட்சி / பேரூராட்சி / ஊராட்சி அலுவலகத்திற்கு பதிவு செய்கிறார்கள். அந்த பதிவு செய்யப்பட்ட பிறகே பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

21 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழ்

பொதுவாக குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்தால் எந்த அபராதமும் இல்லாமல் சான்றிதழ் கிடைக்கும். பதிவு செய்த பிறகு, உங்கள் பகுதியின் நகராட்சி அல்லது ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இப்போது ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கவும் முடியும்.. தமிழ்நாடு அரசு இணையதளம் மூலம் பதிவு எண் அல்லது குழந்தையின் விவரங்களை கொடுத்து சான்றிதழை டவுன்லோடு செய்யலாம்.

மருத்துவமனையில் கொடுக்கும் பிறப்பு அறிக்கை, பெற்றோரின் ஆதார் போன்ற அடையாள ஆவணங்கள் இருந்தாலே, சான்றிதழ் தயாராகி விடும். 21 நாட்களை கடந்த பிறகு பதிவு செய்ய வேண்டும் என்றால், கூடுதல் நடைமுறைகள் மற்றும் சிறிய அபராதம் இருக்கும். ஆனால் அதையும் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் எளிதாக செய்து முடிக்கலாம்.

பிறப்பு சான்றிதழில் எழுத்து பிழைகள்

பிறப்புச் சான்றிதழில் உள்ள சிறிய எழுத்துப் பிழைகளை சரி செய்வது எளிதான செயல் முறையாகும். இதற்காக சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி அல்லது ஊராட்சி அலுவலகத்தில் உள்ள சுகாதார ஆய்வாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலரை அணுகி மனு அளிக்க வேண்டும்.

குழந்தையின் பெற்றோரின் அடையாளச் சான்றுகள் மற்றும் மருத்துவமனை வழங்கிய டிஸ்சார்ஜ் சம்மரி போன்ற ஆவணங்களை சமர்ப்பித்தால், அதிகாரிகள் சரிபார்த்து பிழைகளைத் திருத்தித் தருவார்கள். இந்த வகை திருத்தங்களுக்கு அரசிதழ் அறிவிப்பு தேவையில்லை; பிரமாணப் பத்திரம் போதுமானதாகும்.

பெயரை மாற்ற வேண்டுமா?

பிறப்புச் சான்றிதழில் முழுப் பெயரை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கான நடைமுறை சற்று விரிவாக இருக்கும். இதற்காக முதலில் தமிழக அரசின் அரசிதழில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கான விண்ணப்பங்களில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் கையொப்பமிட வேண்டும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெயர் மாற்றம் செய்ய விரும்பினால், பதிவுபெற்ற மருத்துவரிடம் பெற்ற ஆயுள் சான்றிதழை இணைக்க வேண்டும். அரசிதழில் பெயர் மாற்றத்திற்கான கட்டணம் ரூ.750 ஆகும்; இது karuvoolam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் செலுத்தலாம்.

பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பப் படிவங்களை stationeryprinting.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் பழைய பிறப்புச் சான்றிதழ், ஆதார், ரேஷன் கார்டு, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

பெயர் மாற்ற திருத்தங்கள்

அரசிதழில் பெயர் மாற்றம் வெளியான பிறகு, அந்த அறிவிப்பின் நகலை கொண்டு பிறப்பு பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து புதிய பிறப்புச் சான்றிதழைப் பெற முடியும். அதன் பிறகே ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட பிற ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய இயலும்.

அரசிதழில் பெயர் பிரசுரிக்கப்பட்ட பிறகு, ஐந்து நாட்களுக்குள் அதனை நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஒருமுறை பெயர் மாற்றம் செய்த பிறகு, “என்கிற” என்ற பெயரில் மீண்டும் பிரசுரிக்க அனுமதி இல்லை. அரசிதழில் ஏற்பட்ட அச்சுப் பிழைகள் இருப்பின், ஆறு மாதங்களுக்குள் திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க விதியாகும்.

பிறப்பு சான்றிதழ் தொலைந்தால்?

இதேபோல், பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டாலும் கவலைப்பட தேவையில்லை. தற்போது டிஜிட்டல் வசதிகள் மூலம் அதை மீண்டும் எளிதாகப் பெற முடியும்.

தமிழ்நாடு அரசு வழங்கும் crstn.org என்ற இணையதளம் வழியாக பிறப்பு சான்றிதழை ஆன்லைனில் தேடி, PDF வடிவில் பதிவிறக்கம் செய்யலாம். பிறந்த நபரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், மாவட்டம் போன்ற விவரங்களை உள்ளீடு செய்தால், பதிவு இருந்தால் உடனடியாக சான்றிதழ் கிடைக்கும். இந்த வசதி 01.01.2018க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கு உள்ளது.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற மாநகரங்களில் மாநகராட்சி இணையதளங்களின் மூலமாகவும் பிறப்பு சான்றிதழை நேரடியாக டவுன்லோடு செய்யலாம்…. 2018க்கு முந்தைய பதிவுகளுக்கு சில இடங்களில் நேரில் அலுவலகம் செல்ல வேண்டிய தேவை இருக்கலாம். இருந்தாலும், பழைய பதிவுகளையும் டிஜிட்டல் வடிவில் மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதால், எதிர்காலத்தில் அவையும் ஆன்லைனில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா12 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா15 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா17 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்20 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா3 நாட்கள் ago

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Let trusted websites link to yours automatically, so your site appears higher in google search results — and gets mentioned in ai chats like chatgpt..