இந்தியா
ஓடிபி முறையில் கொரியர் பெறுவது பாதுகாப்பானதா?

கொரோனா காலத்திற்கு முன்னர் கொரியர் கம்பெனிகள் ஒரு பொருளை வீ்ட்டிற்கு டெலிவரி பண்ண வரும்போது, பொருளை பெறுபவரின் கையொப்பத்தை பெற்று, பொருளை கொடுத்து சென்றார்கள். (தற்போதும் பல கொரியர் கம்பெனிகள் இந்த நடைமுறைய கடைப்பிடித்து வருகின்றது) கொரோனா காலத்தில் contactless delivery என்பது அவசியம் என்பதின் அடிப்படையில், நமது அலைபேசிக்கு வரும் OTP-யை பெற்றுக்கொண்டு, வாசலில் பொருள்களை வைத்து விட்டு சென்றார்கள். தற்போது கொரோனா மறைந்த பிறகும், தொடர்ந்து OTP முறையை, பல கொரியர் நிறுவனங்கள் வாடிக்கையாளர் பொருளை பெற்ற ஓப்புதலுக்காக பயன்படுத்துகின்றது.
.சமீபத்தில் வலைத்தளங்களில் ஒரு வீடியோ உலாவருகின்றது. அதாவது ஒருவர் ஆர்டர் பண்ணாத பார்சலை டெலிவர் செய்ய கொண்டு வந்து, அதை கேன்சல் செய்ய வேண்டும் என்றால் வரும் OTP-யை கொடுங்கள் என்று கேட்டு, அப்படி பெற்ற OTP கொண்டு வங்கியில் உள்ள அவரது பணத்தை எடுத்துவிடுகின்றார்கள். மேற்படி நிகழ்வை போலவே, கொரியர் டெலிவரிக்கான OTP என்ற கூறிவிட்டு, அந்த OTP எண்ணை உள்ளிட்டு வங்கி மோசடி நடக்க வாய்ப்புண்டு
.இரண்டவதாக, கொரியர் நிறுவனத்தால் ஒரு பொருள் வழங்கப்படவில்லை என்ற ஒரு பிரச்சனை ஏற்பட்டால், பழைய முறையில் அந்த கொரியர் நிறுவனமானது வாடிக்கையாளரிடம் பொருளை வழங்கியதை உறுதி செய்ய வாடிக்கையாளரிடம் பெற்ற கையொப்பத்தை சான்றாக காண்பிக்க வேண்டும். ஆனால் தற்போதைய OTP முறையில் வாடிக்கையாளரிடம் பொருளை பெற்றுக்கொண்டதற்காக வாடிக்கையாளர் கையொப்பமிட்டு பெற்ற ஆவணம் எதுவுமில்லை. வாடிக்கையாளர் OTP கொடுத்துள்ளதால், பொருள் வாடிக்கையாளரிடம் கொடுக்கப்பட்டு விட்டது என்ற வாதத்தை கொரியர் கம்பெனி முன் வைக்கலாம். இங்கு ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும். OTP அனுப்புவதும் அந்த கொரியர் கம்பெனிதான் என்பதின் அடிப்படையில் அந்த கம்பெனியிடமும் அந்த OTP இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
.OTP முறையில் கொரியரை பெறுவது என்பது பாதுகாப்பானது அல்ல… சிந்தித்து செயல்படுவீர்..


















