Connect with us

இந்தியா

இன்றைய நீதிமன்றச் செய்திகள் – 04.01.2026 கணவர் காணாமல் போனால் மனைவி 2வது திருமணம் செய்யலாமா?

Published

on

கணவர் காணாமல் போனால் மனைவி 2வது திருமணம் செய்யலாமா?

இந்து திருமணச் சட்டம், பிரிவு 11 மற்றும் பிரிவு 13 தொடர்பாக, கணவர் காணாமல் போய் 7 ஆண்டுகள் வரை எந்த தகவலும் இல்லாத நிலையில் மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அந்த திருமணம் சட்டப்படி செல்லுமா? என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. இதற்கு சட்டம் தெளிவான பதிலை வழங்குகிறது.

ஒரு வாழ்க்கைத் துணைவர் உயிரோடு உள்ளாரா அல்லது இல்லையா என்பது குறித்து, மற்றொரு வாழ்க்கை துணைவருக்கு 7 ஆண்டுகளுக்கு மேலாக எந்த தகவலும் இல்லாத நிலை ஏற்பட்டால், அது இந்து திருமணச் சட்டம் பிரிவு 13ன் கீழ் விவாகரத்து பெறுவதற்கான ஒரு காரணமாக மட்டும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், இதனால் திருமண பந்தம் தானாகவே முடிவடைந்துவிடும் என்று சட்டம் எங்கும் கூறவில்லை.

7 ஆண்டுகள் வரை கணவர் அல்லது மனைவி குறித்து எந்த தகவலும் இல்லை என்பதற்காக மட்டும், நீதிமன்ற விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது சட்டப்படி பாதுகாப்பானது அல்ல. அத்தகைய இரண்டாவது திருமண உறவில், எதிர்காலத்தில் பல சட்ட சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

இந்தச் சூழலில் இந்திய சாட்சியச் சட்டம், 1872 – பிரிவு 108 முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருவரை “7 ஆண்டுகளாக காணவில்லை, அவர் உயிரோடு உள்ளாரா என்பது தெரியவில்லை” என்று கூறுகிற நபரே, முதலில் அந்த உண்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதன் பின்னரே, அந்த நபர் அந்த காலகட்டத்தில் உயிருடன் இருந்தார் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு காணாமல் போன வாழ்க்கைத் துணைவருக்கு அல்லது அவரை சார்ந்தவர்களுக்கு ஏற்படும்.

ஆனால், இந்திய சாட்சியச் சட்டத்தின் இந்த ஊகம் (presumption) திருமண பந்தத்தை தானாக ரத்து செய்வதில்லை. எனவே, 7 ஆண்டுகள் காணாமல் போயுள்ளார் என்ற காரணத்தால் மட்டும், சட்டப்படி விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறுவதை ஏற்க முடியாது.

எனவே, கணவர் அல்லது மனைவி 7 ஆண்டுகளாக காணாமல் போயிருந்தால், இரண்டாவது திருமணம் செய்ய முன், அந்த காணாமல் போன விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்து, தகுதி வாய்ந்த நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து பெற்றிருக்க வேண்டும். அப்படி நீதிமன்ற உத்தரவு இல்லாமல் செய்யப்படும் இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது.

இந்தக் கோட்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் Punjab and Haryana High Court தனது தீர்ப்பில், வாழ்க்கைத் துணைவர் 7 ஆண்டுகளாக காணாமல் போயுள்ளார் என்ற காரணத்தால் மட்டும், நீதிமன்ற விவாகரத்து இல்லாமல் செய்யப்பட்ட 2வது திருமணம் சட்டப்படி செல்லாது” என தெளிவாக கூறியுள்ளது.

(வழக்குகள்: F.A.O. No.246-M/2009 & F.A.O. No.309-M/2003, நாள்: 03.08.2015 – சவர்ன்ஜித் கவுர் Vs Lt. Col. அவதார் சிங் & பிறர், 2016-2-DMC-478)

மொத்தமாகப் பார்க்கும்போது, 7 ஆண்டுகள் தகவல் இல்லாமை என்பது விவாகரத்து பெறுவதற்கான காரணமே தவிர, இரண்டாவது திருமணம் செய்யும் அனுமதி அல்ல. சட்டப்படி பாதுகாப்பான நடைமுறை என்னவென்றால், முதலில் நீதிமன்ற விவாகரத்து பெற்று, அதன் பிறகே இரண்டாவது திருமணம் செய்வதே ஆகும்.

 

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா9 minutes ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

வணிகம்20 மணி நேரங்கள் ago

8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

வணிகம்7 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

Translate »
Ciekawostką na tym zabraniu było wybranie byłego prezesa do rady osiedla. Email. Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib.