Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.01.2026

Published

on

  1. உலகிலேயே முதன்முறையாக 155 மி.மீ. பீரங்கி குண்டுகளில் Ramjet அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனது தாக்குதல் தூரத்தை 80 கி.மீ. வரை அதிகரித்து இந்திய பாதுகாப்புத் துறை சாதனை.
  2. சமத்துவ நடைபயணத்தின் 3ம் நாளில் மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிலம்பம் சுற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
  3. பொங்கல் பரிசாக ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு ரொக்கம் ரூ.3000 வேட்டி சேலை வழங்கப்பட உள்ளது.
  4. வெனிசுலா விவகாரம் மிகுந்த கவலை அளிப்பதாகவும் நிலைமையை உன்னிப்பாக கண்காணிப்பதாகவும் இந்தியா அறிக்கை.
  5. மனிதர்களை போலவே ரோபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உடனடியாக உணர்ந்து எதிர்வினை ஆற்றும் வகையில் செயற்கைத்தோலை உருவாக்கி வறங்காங் நகர பல்கலைக் கழக விஞ்ஞானிகள் அசத்தல்
  6. டி-20 உலக கோப்பை தொடரில் விளையாட இந்தியாவுக்கு வரப்போவதில்லை என வங்க தேச கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு.
  7. மொபைல் தயாரிப்பிலிருந்து தற்காலிகமாக விலக ஆசஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
  8. மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டேமியன் மார்ட்டின் அபாயக் கட்டத்தை தாண்டி மீண்டு வருகிறார் என அறிவிப்பு

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
No monthly fees.