வேலைவாய்ப்பு
அஞ்சல் துறையில் வேலை: Postal Assistant, Sorting Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு – 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு!
அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழ்நாடு அஞ்சல் துறையில் Postal Assistant மற்றும் Sorting Assistant பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது முக்கியத் தகுதி.
🧾 பணியின் விவரம்:
பதவிகள்: Postal Assistant, Sorting Assistant
துறை: தமிழ்நாடு அஞ்சல் துறை
வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை
தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்கும் முறை:
tamilnadupost.cept.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் இணைத்து அந்தந்த டிவிசன் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 2, 2025
அட்மிட் கார்ட் வெளியீடு: ஜூலை 14, 2025
தேர்வு தேதி: ஜூலை 20, 2025
விண்ணப்பக் கட்டணம்:
பொது விண்ணப்பதாரர்கள்: ₹100
SC/ST/மாற்றுத்திறனாளிகள்: கட்டண விலக்கு
தேர்வு முறை:
சில பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு இல்லை.
தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.






