Connect with us

வேலைவாய்ப்பு

கிராம உதவியாளர் பணிக்கான புதிய அறிவிப்பு – 2299 பணியிடங்களுக்கு தேர்வு தேதி வெளியீடு!

Published

on

tnpsc

விண்ணப்பிக்க கடைசி தேதி, தேர்வு தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு வருவாய்துறையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் நோக்கில் மொத்தம் 2299 பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

🔹 விண்ணப்பக் கடைசி தேதி: 04.08.2025
🔹 தேர்வு தேதி: 02.09.2025
🔹 ஊதிய விகிதம்: ₹11,100 – ₹35,100 (சிறப்பு கால முறை ஊதியம் அடிப்படையில்)


🧾 விண்ணப்பிக்கும் தகுதி மற்றும் முக்கிய அம்சங்கள்:

📌 கல்வித் தகுதி:
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பில் தமிழ் ஒரு பாடமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

📌 வசிப்பிடம் சான்றிதழ்:
அறிக்கையிலுள்ள கிராமத்தில் அல்லது குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட தாலுகாவில் வசித்து வர வேண்டும்.

📌 மதிப்பெண்கள் பகிர்வு:

  • தமிழில் வாசிக்கவும் எழுதவும் தெரிந்தால் – 30 மதிப்பெண்கள்

  • மிதிவண்டி/இருசக்கர வாகன ஓட்டும் திறன் – 10 மதிப்பெண்கள்

  • வசிப்பிடம் சான்றிதழ் – 35 மதிப்பெண்கள்

  • நேர்காணல் – 15 மதிப்பெண்கள்

📌 நேர்காணல் குழு:
வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் ஆகியோர் நேர்காணலை நடத்துவார்கள்.

📌 பதிவு மற்றும் சரிபார்ப்பு:
விண்ணப்பங்கள் தனித்தனி பதிவேட்டில் தேதிவாரியாக பதிவு செய்யப்பட்டு, சரிபார்க்கப்பட்ட பின் ஒப்புதல் சீட்டு வழங்கப்படும்.

📌 அறிவிப்பு வெளியீடு:
06.07.2025 அன்று (ஞாயிற்றுக்கிழமை) தினசரி பத்திரிகை மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
scale your rankings with free backlinks & website citations.