Connect with us

வணிகம்

8வது ஊதியக் குழு: மத்திய அரசு பணியாளர்களுக்கு 5 பதவி உயர்வு வாய்ப்பு – முழு விவரங்கள்!

Published

on

மத்திய அரசு பணியாளர்களுக்கு முக்கியமான செய்தி! மத்திய அரசு சமீபத்தில் 8வது ஊதியக் குழுவை அமைக்க திட்டமிட்டதாக அறிவித்தது. இதன் மூலம் ஊதிய உயர்வு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊதிய உயர்வு – புதிய தகவல்கள்

8வது ஊதியக் குழு அமையும்போது பணியாளர்களின் ஊதிய உயர்வு பெரிதாக இருக்கும். இந்த உயர்வு பிட்மென்ட் காரணி (Fitment Factor) அடிப்படையில் வழங்கப்படும். இது 1.92 முதல் 2.86 வரை இருக்கலாம். இதன் மூலம் ஊதியம் 92% முதல் 186% வரை அதிகரிக்கலாம்.

பதவியுயர்வில் மாற்றம் – 5 முறை வாய்ப்பு?

தற்போது, மத்திய அரசு பணியாளர்களுக்கு 10, 20, 30 ஆண்டுகளில் மூன்று முறை பதவியுயர்வு கிடைக்கிறது. ஆனால், 8வது ஊதியக் குழு உருவாக்கப்பட்டால், 5 முறை பதவியுயர்வு வழங்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். இது சம்பந்தமாக புதிய சிபாரிசு முன்மொழியப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வு

  • 8வது ஊதியக் குழுவில் குறைந்தபட்ச ஊதியம் ₹51,500 ஆக உயரலாம்.
  • ஓய்வூதியத் தொகையும் ₹25,000க்கும் அதிகமாக உயர வாய்ப்பு உள்ளது.
  • இருப்பினும், ஊதிய உயர்வின் கணக்கீடுகள் மற்றும் பதவியுயர்வு விதிகளில் மாற்றங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

ஊதியக் குழுவுக்கு முன்பே கூடுதல் DA

8வது ஊதியக் குழு அமைக்கப்படுவதற்குள் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி (DA) உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

Translate »
Your Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically.