வணிகம்
8வது ஊதியக்குழு: ரூ.18,000 சம்பளம் ரூ.79,794 ஆக உயரும் சாத்தியம்!

8வது ஊதியக்குழு: ரூ.18,000 சம்பளம் பெறும் ஊழியருக்கு ரூ.79,794 வரை உயர்வு கிடைக்க வாய்ப்பு!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக 8வது ஊதியக்குழு (8th Pay Commission) விரைவில் அமலுக்கு வர உள்ளது. இது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு பெரிய வரமாக அமைக்கக்கூடும்.
7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 2025-ல் முடிவடையும் நிலையில், ஜனவரி 2026 முதல் புதிய ஊதிய அமைப்பு அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 2025-ல் மத்திய அரசு 2% அகவிலைப்படி உயர்வை அறிவித்து, மொத்த அகவிலைப்படியை 55% ஆக உயர்த்தியது. ஜூலை 2025-ல் மேலும் ஒரு முறையாக அகவிலைப்படி உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதிய உயர்வு எப்படி அமையும்?
தற்போது ரூ.18,000 அடிப்படையுடன் 55% அகவிலைப்படி இணைக்கப்படும்போது, சம்பளம் ரூ.27,900 ஆகிறது. இதன் அடிப்படையில் புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக பரிந்துரைக்கப்பட்டால், சம்பளம் ரூ.71,703 ஆக உயரும். இது 2.86 என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டால், சம்பளம் ரூ.79,794 ஆகலாம்.
அதாவது, ரூ.18,000 சம்பளம் பெறும் ஒரு அரசு ஊழியரின் சம்பளம், 8வது ஊதியக்குழுவின் பரிந்துரையுடன் ரூ.53,000 முதல் ரூ.79,000 வரை உயர வாய்ப்பு உள்ளது. இது வரலாற்றிலேயே மிகப்பெரிய சம்பள உயர்வாக அமைவதற்கான சாத்தியமே அதிகம்.
8வது ஊதியக்குழு, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தனது பரிந்துரைகளை அளிக்கலாம் என்றும், ஜனவரி 1, 2026 முதல் புதிய ஊதிய அமைப்பு நடைமுறையில் அமையும் என்றும் நம்பப்படுகிறது.






