தமிழ்நாடு
செய்தியாளர்களை கிண்டல் செய்து வீடியோ: 7 வயது சிறுவனுக்கு குவியும் சினிமா வாய்ப்பு!
Published
2 years agoon
By
Shiva
செய்தியாளர்களை கிண்டல் செய்து 7 வயது சிறுவன் பதிவு செய்த வீடியோவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து அந்த சிறுவனுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
கோவையை சேர்ந்த ஜோதி ராஜ் என்பவரின் மகன் 7 வயது சிறுவன் ரித்து. இரண்டாம் வகுப்பு படித்து வரும் இவர் யூடியூப் வீடியோ ஒன்றில் செய்தியாளர் போல் அபாரமாக நடித்துள்ளார். தனது தந்தையே திரைக்கதை எழுதி இயக்குவதாகவும் அதில் தான் நடிக்க போவதாகவும் பேட்டி ஒன்றில் ரித்து கூறியுள்ளார்.
செய்தியாளர்களை கிண்டல் செய்து இவர் பதிவு செய்துள்ள வீடியோ மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது அவர் தமிழகத்தில் பிரபலம் ஆகியுள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது என்றும் எந்த செய்தியாளர்களின் மனம் நோகும் வகையில் இந்த வீடியோ பதிவு செய்யப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
இந்த சிறுவன் தற்போது யூடியூபில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி விட்ட நிலையில் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக வீடியோ பதிவு செய்யப் போவதாக பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் உங்களுக்கு சென்னை பிடிக்குமா? கோவை பிடிக்குமா? என்ற கேள்வி கேட்டபோது எனக்கு தமிழ் நாடு பிடிக்கும் என்று பதில் சொல்லி அனைவரையும் அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு வீடியோவின் மூலம் உலக புகழ்பெற்ற 7 வயது சிறுவன் ரித்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
You may like
-
மக்கள் பணத்தை 400 கோடி ரூபாயை ஏப்பம் விட்டு வெளிநாடு தப்பிச்சென்ற கோவை தம்பதி!
-
யூடியூப் ஷார்ட்ஸ் புதிய வசதி: மகிழ்ச்சியில் பயனர்கள்!
-
‘வலிமை’ வசூலை ஏற்று கொள்ள மறுக்கும் யூடியூப் பிரபலம்: வதந்தி என பொய்த்தகவல்
-
யூடியூபில் ஒரே ஒரு வீடியோ: ரூ.300 கோடி அபேஸ் செய்த கோவை நபர்!
-
என் அம்மாவ பத்தியா தப்பா சொல்ற? பயில்வான் ரங்கநாதனை வச்சு செஞ்ச ராதிகா!
-
5000 டாலர் கொடுத்து ஆஸ்கர் யூடியூப் சேனலில் இடம்பெற்ற ‘ஜெய்பீம்? அதிர்ச்சி தகவல்!