தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று 5000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

தமிழகத்தில் நேற்று 4000 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சென்னையில் நேற்று 1500க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று 1700க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை பார்ப்போம்
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 5441
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 920,827
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1752
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 23
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,863
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1890
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 874,305
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 87,505
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 200,17,941





















