Connect with us

தமிழ்நாடு

அரக்கோணம் தலித் இளைஞர்கள் கொலை: விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை- நாளை விசிக மாபெரும் ஆர்ப்பாட்டம்

Published

on

அரக்கோணத்தில் இரண்டு தலித் இளைஞர்கள், முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கொலைக்கு பாமக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்களே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை மாநிலம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோகனூரில் சாதிவெறியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் அர்ஜுனன், சூரியா ஆகிய இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகளைச் செய்த சாதிவெறியர்கள் மற்றும் மணல் திருடர்களை உடனடியாகக் கைதுசெய்து குண்டர்சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இந்தப் படுகொலைகளைக் கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிமுகவின் காவேரிப்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பழனி என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். திருட்டு மணல் ஏற்றிய வாகனங்கள் தலித் குடியிருப்பின் வழியாக வந்தபோது அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக வேட்பாளர் கௌதமசன்னாவுக்கு ஆதரவாக பானை சின்னத்துக்கு அக்கிராம இளைஞர்கள் வாக்குகள் சேகரித்துள்ளனர். அத்துடன், பாமக ஆதரிக்கும் அதிமுக வேட்பாளரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை.

இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் சூழலைப் பயன்படுத்தி, பழனியின் மகன்களும் அதிமுக, பாமக சாதிவெறியர்களும் கூட்டுசேர்ந்து இந்தப் படுகொலையை நடத்தியுள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். தோல்வி பயத்தில் அதிமுக – பாஜக- பாமக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். காட்டுமன்னார்கோயில், வானூர், திருப்போரூர், கிருஷ்ணகிரி மற்றும் அரியலூர் தொகுதிகளிலும்கூட தலித்துகளுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்துள்ளன.

தனது தனிப்பட்ட அரசியல் ஆதாயத்துக்காக எடப்பாடி பழனிசாமி சாதிவெறியர்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வந்ததோடு தலித் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டும் காணாததுபோல் இருந்தார். அதன் விளைவே இந்தத் தாக்குதல்களும் படுகொலைகளும் இப்போது நடந்துள்ளன.

விசிக இடம் பெற்றுள்ள திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போவதைத் தாங்க முடியாத மதவெறியர்களும் சாதிவெறியர்களும் தமிழ்நாட்டைச் சீர்குலைக்க மிகப்பெரிய சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளனர் என்பதன் அடையாளமே இந்தப் படுகொலை.

இத்தகைய சூழலில் இதனை வன்மையாகக் கண்டித்துக் குரலெழுப்ப வேண்டுமென அனைத்து சனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கிறோம்.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

கட்டுரைகள்30 minutes ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

இந்தியா44 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.06.2026

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (03 ஜூன் 2026): யாருக்கு அதிர்ஷ்டம் கைகூடும்? யாருக்கு புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன?

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

இந்தியா1 நாள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆரோக்கியம்1 நாள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

ஆன்மீகம்1 நாள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

இந்தியா1 நாள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் அதிரடி பரிந்துரை! 5-அடுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமலானால் 400% வரை சம்பள உயர்வு கிடைக்குமா?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 3,490 கலோரி ஃபார்முலா என்ன? பால், காய்கறி விலை எப்படி உங்கள் சம்பள உயர்வை தீர்மானிக்கலாம்?

வணிகம்3 நாட்கள் ago

ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்: UPI, LPG, வருமான வரி, PAN விதிகளில் முக்கிய மாற்றங்கள்! பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

vinod
சினிமா செய்திகள்3 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

வணிகம்2 நாட்கள் ago

தங்க நகைக்கடைகளில் கூட்டம் இல்லை! வரி உயர்வால் தேவை 70% வீழ்ச்சி

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

உலகம்2 நாட்கள் ago

உலகிலேயே தன் மக்களுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் தானே உற்பத்தி செய்யும் ஒரே நாடு எது தெரியுமா?

சினிமா செய்திகள்3 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

வணிகம்2 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
power only wyoming. Learn more about troubleshooting wordpress. Road runner car transport.