தமிழ்நாடு
கோவையில் ‘500 போலி வாக்காளர்கள்’; ஜக்கி வாசுதேவ் – எஸ்.பி.வேலுமணியின் கூட்டுச் சதி அம்பலம்!

‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று புகழப்படும் கார்த்திகேய சிவசேனாபதி, வரும் தேர்தலில் திமுக சார்பில் தொண்டமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். தொண்டமுத்தூர் தொகுதியில் கார்த்திகேய சிவசேனாபதிக்கு எதிராக அதிமுக தரப்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி களமிறக்கப்பட்டு உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையில் தொண்டமுத்தூர் தொகுதியில் கடும் போட்டி இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த தொகுதியில் வெல்வதற்கு அமைச்சர் வேலுமணி பல்வேறு தில்லு முல்லு காரியங்களில் ஈடுபட்டு வருகிறார் என்று தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இப்படியான சூழலில் கோவை, தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் இருக்கும் ஈஷா மையத்தில் மட்டும் சுமார் 500 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்று பரபரப்பான செய்தி வந்துள்ளது.
‘அமைச்சர் எஸ்.பி. வேலுமணி – ஜக்கி வாசுதேவ் ஆகியோர், வடமாநிலங்களை சேர்ந்த 500 நபர்களை தொண்டாமுத்தூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் சேர்த்து மோசடி’#NoVoteForADMK #SayNoToBJP pic.twitter.com/sexfjysOEj
— DMK IT WING (@DMKITwing) April 1, 2021
குறிப்பாக ஈஷா மையத்தின் வாக்காளர்ளில் பெரும்பான்மையானவர்கள் அங்குள்ள சாமியார்கள் என்றும், அவர்கள் இயற் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுகிறது. மேலும், அனைவருக்கும் வீட்டு முகவரி என்பது இல்லை என்றும், பலரும் ‘ஜக்கி வாசுதேவ்’ அவர்களின் பெயரையே தந்தை, குரு, இதரர் பிரிவுக்கு கீழ் குறிப்பிட்டுள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் ஆதாரத்துடன் காணொலி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இது கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


















