தமிழ்நாடு
நான் சொன்னது தப்புதான், வாபஸ் பெறுகிறேன்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

கோவை மக்கள் குறித்து நான் சொன்னது தவறு தான் அதை வாபஸ் பெறுகிறேன் என நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி கூறியுள்ளார்.
கோவையில் நேற்று அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் 50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவி தொகை மற்றும் 100கும் மேற்பட்ட ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம் ஆகியவற்றை வழங்கினார்
இதனை அடுத்து நிகழ்ச்சியில் அவர் பேசியபோது ’கோவை மக்களை நம்ப முடியாது என்று கூறியதை நான் வாபஸ் பெறுகிறேன் என்று கூறினார். உள்ளாட்சி தேர்தலில் கோவை மக்கள் திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளார்கள் என்றும் கோவையில் உள்ள 100 வார்டுகளில் 96 வார்டுகளில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது என்றும் அதற்கு கோவை மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்
கோவை மக்களை நம்ப முடியாது என்று கூறியதை நான் வாபஸ் பெறுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவை மக்களை நம்ப முடியாது என்றும், கூட்டம் கூடுகிறார்கள், ஆனால் வாக்குகளை மாற்றிப் போட்டு விடுகிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது

















