இந்தியா
சினிமா வாய்ப்பு… அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் பலாத்காரம்: இளம்பெண் பரபரப்பு புகார்!

கேரளாவில் சமீப காலமாக சிறு குழந்தைகள் முதல் இளம்பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் வழக்குகள் அதிகரித்து வரும் சூழலில் தற்போது இளம்பெண் ஒருவர் சினிமா ஆசைக்காட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேரியுள்ளது.

#image_title
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். பின்னர் அது தொடர்பாக பேச வேண்டும், உன்னை முன்னணி நடிகையாக்குகிறேன் என கூறி அந்த பெண்ணை அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வருமாறு அழைத்துள்ளார்.
சினிமா ஆசையில் அந்த நபர் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பிய அந்த இளம்பெண் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார். ஆனால் அந்த நபர் இளம்பெண்ணை தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனையடுத்து நடந்தவற்றை கூறி காவல்துறையில் புகார் அளித்துள்ள அந்த பெண், தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவது குறித்து அந்த நபரிடம் கேட்டபோது அவர்கள் அனைவரும் என்னைச் சேர்ந்து மிரட்டுகின்றனர் என கூறியுள்ளார். எனவே என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.