தமிழ்நாடு
அண்ணாமலை மீது ரூ.100 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு: ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு பதிவு செய்யப்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு முறை சுற்றுப்பயணமாக துபாய் சென்றுள்ளார் என்பதும் அவர் தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு கூற இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் துபாய் செல்லும் தமிழக முதல்வர் 5 ஆயிரம் கோடி ரூபாய் கொண்டு சென்றது ஏன் என்று அண்ணாமலை எழுப்பிய கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சிப்பதா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார் .
முதல்வர் பயணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய அண்னாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வர் மீது சர்ச்சைக்குரிய கருத்து கூறிய அண்ணாமலை மீது 100 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாக அண்ணாமலைக்கு அவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



















