தமிழ்நாடு
அடித்து தூக்கிய திமுக.. கொங்கு மண்டலத்தில் மாஸ்.. 10 ஆயிரம் அப்படியே கட்சியில் ஐக்கியம்

சென்னை: கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் மாற்று கட்சியில் இருந்து 10 ஆயிரம் பேர் திமுகவில் ஒரே நாளில் இணைந்து உள்ளனர்.
பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார். பாஜகவின் இதனால் கடுமையாக அப்செட் ஆகி உள்ளனர். நிர்மல் வெளியேறிய சில நிமிடங்களில் பல பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
இந்த அதிமுக பாஜக மோதலுக்கு இடையில் தற்போது திமுகவும் மாற்று கட்சியில் இருந்து ஆட்களை தட்டி தூக்க தொடங்கி உள்ளது. அதிமுக, பாஜக, பாமக நிர்வாகிகள் இன்று ஒரே நாளில் கோவையில் நடந்த விழாவில் திமுகவில் இணைந்து உள்ளனர். சமீபத்தில் கோவை செல்வராஜ் ஓ பன்னீர்செல்வம் அணியில் இருந்து திமுகவில் இணைந்தார். இவர் வகுத்த திட்டத்தின் மூலம் இவர்கள் திமுக வந்துள்ளனர்.
இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி செய்துள்ள போஸ்டில், மாநிலம் முன்னேறிட, ‘திராவிட நாயகன்’ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து 10,000 மாற்றுக்கட்சியினர், இன்று கோவையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கோவை செல்வராஜ் அவர்களின்
தலைமையில் கழகத்தில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அண்ணன் எஸ்.முத்துசாமி அவர்கள், அண்ணன் காந்தி அவர்கள், அண்ணன் மு.பெ.சாமிநாதன் அவர்கள், சகோதரி கயல்விழி செல்வராஜ் அவர்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ஆறுகுட்டி அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துக்கொண்டனர், என்று குறிப்பிட்டு உள்ளார்.