இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 18.11.2026

- 2029-ஆம் ஆண்டுக்குள் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொதுசிவில் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் உள்துறை அமைச்சர் அமித்ஷா
- சென்னையில் தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்குக் கீழ் சரிவு. சுமார் ஓராண்டுக்குப் பிறகு சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.560 சரிந்து, ஒரு சவரன் ரூ.99,760-க்கும், ஒரு கிராம் ரூ.12,470-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- அமெரிக்கத் தலைநகர் வோஷிங்டன்_DCயிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளைக் குறிவைத்து, ‘ #டேர்ட்டி_பாம்‘ ( Dirty bomb ) தாக்குதலை நடத்த #ஈரான் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க #உளவுத்துறைத் தகவல் வெளியிட்டுள்ளது.
- பத்திரப்பதிவு ஆவணங்களை இனி வீட்டு முகவரிக்கே அனுப்ப திட்டம்: விரைவு அஞ்சல் மூலம் விநியோகம் செய்ய அரசு உத்தரவு
- திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: இடைக்கால தடை கோரும் தமிழக அரசு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
- சதுப்பு நில எல்லையை வரையறுக்கும் பணிகளை விரைந்து முடிக்க மாநில சதுப்பு நில ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு!!
- பொதுமக்கள் இனி காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமலே, வீட்டிலிருந்தபடியே இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு (Electronic Community Service Register – e-CSR) ரசீதைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய இணையவழிச் சேவையைத் தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் Dr. மகேஷ்குமார் அகர்வால், IPS, இன்று (18.11.2026) தொடங்கி வைக்கிறார்.
- 50 பயணங்களுக்கு மேல் கட்டணம் கட்டாயம் அரசு பஸ்களுக்கு சுங்க கட்டண சுமை: மாதம் ரூ.50 லட்சம் வரை கூடுதல் செலவு போக்குவரத்து கழகங்களுக்கு புதிய நெருக்கடி





