இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.02.2026

- இன்று மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 அணைத்து பயனாளிகள் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்பட்டது
- டிஎன்பிஎஸ்சி, எம்ஆர்பி, டிஆர்பி முதலியவை மூலம் தேர்வான 9801 பேருக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- வர இருக்கும் 5 மாநில தேர்தலை முன்னிட்டு மாநில அரசுகள் வழங்கக்கூடிய இலவச சலுகைகளை எதிர்த்து பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்ஙத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தவெகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜீனாவும் ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.
- டெட் தேர்வுக்கு பிப்ரவரி 18 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 10. தேர்வு நாள் ஜீலை 4 மற்றும் 5.
- ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து 3வது நாளாக கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
- ஏஐ யால் ஐடி துறை அழியாது. ஐடி துறை வேலைகளுக்கு முழுமையான மாற்றாக ஏஐ அமையாது என்றும், உற்பத்தித் திறனை அதிகரிக்கும் ஒரு கருவியாகவே ஏஐ செயல்படும் என்று பன்னாட்டு வங்கி நிறுவனமான ஜேபி மார்கள் நம்பிக்கை









