Connect with us

ஆன்மீகம்

தை அமாவாசை அன்று பௌர்ணமி தோன்றிய நிகழ்வு!

Published

on

முன்பொரு காலத்தில் தஞ்சை நகரை ஆண்டு கொண்டிருந்த சரபோஜி மன்னர், தை அமாவாசை நாள் அன்று, திருக்கடையூர் அபிராமி அன்னையை தரிசிக்க வந்திருந்தார். அங்கு வந்திருந்த அனைவரும் மன்னருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஆனால் அன்னை அபிராமியின் தீவிர பக்தரான அபிராமி பட்டர், பக்தியில் மெய்மறந்து இருந்த தருணம் அது. பித்தன் என்று பலராலும் நினைக்கப்பட்டு இருந்த அவரைப் பற்றி பலரும் மன்னரிடம் அவதூறு பரப்பினர். மன்னரும் அபிராமி பட்டரை நோக்கி “பட்டரே, இன்று என்ன திதி என்று அறிவீரா?” என்று சோதிக்கும் விதத்தில் கேட்டார்.

அபிராமி பட்டரோ அம்மையின் தெய்வீக முகத்தை கண்டு பக்தி மயக்கத்தில், இன்று பௌர்ணமி திதி என்று சொல்லிவிட்டார். மன்னர் திரும்பவும், “இன்று இரவு முழு நிலவு வருமா?” என்று கேட்க, அபிராமி பட்டரோ, “ஓ நிச்சயம் வருமே” என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். அப்படியெனில், இன்று இரவு முழு நிலவு வரவில்லை எனில் உமக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூறிச் சென்று விட்டார். பட்டரின் முகத்தில் எவ்வித கலக்கமும் இல்லை.

அன்று இரவு நேரம் வந்தது; மக்களும் வந்து கூடினர். அமாவாசை தினத்தில் பௌர்ணமி நிலவு வரும் என்று எப்படி கூறினீர்கள்? இப்போது பௌர்ணமி நிலவு தோன்றாவிட்டால் உம்மை தீயில் இட்டு கொளுத்தி விடுவோம் என்று கோபத்துடன் கூறினார் அரசர். பட்டரோ வானத்தையே நோக்கி கொண்டிருந்தார். தீயின் முன்பு பட்டரை நிறுத்தினர். அப்போதும் மனம் உருகி அபிராமி அந்தாதி பாடலை பாடினார் பட்டர்.

அன்னை அபிராமிதேவி, பட்டரின் பக்தியை உலகறிய செய்ய, தன்னுடைய தோடு ஒன்றை கழற்றி வானில் வீசினாள். அது பௌர்ணமி நிலவாக மிளிர்ந்தது. சரபோஜி மன்னர் மற்றும் மக்கள் மிரண்டு போயினர். அபிராமி பட்டரின் பக்திக்கு கிடைத்த பரிசு அது. தை அமாவாசை தினத்தில் பௌர்ணமி நிலவு தோன்றியது போல் இருந்தது அந்த நிகழ்வு. அபிராமி பட்டர் விடுவிக்கப்பட்டார்; அவர் பக்தி காலத்தால் அழிக்க முடியாததாக மாறியது.

வாழ்க்கையில் எப்பேர்பட்ட கஷ்ட காலங்கள் நிகழ்ந்த போதிலும், பட்டரைப் போல அன்னை அபிராமி தேவியின் அபிராமி அந்தாதி பாடலை மனம் உருகி பாடி வந்தால் அவளின் அனுக்கிரகம் நிச்சயம் கிட்டும்.

ஆயுள் கண்டத்திலிருந்து அபிராமி பட்டர் மீண்டு வந்த தினம் இன்று. ஆதலால் இன்றைய நாள் இறை வழிபாட்டிற்கு மற்றும் திருக்கடையூர் அன்னை அபிராமி தேவியின் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள் ஆகும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்5 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்5 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்5 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

கட்டுரைகள்2 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
"steve represented me in both a sale and a purchase in coconut point. Heavy equipment transport bucks pa. power only rhode island.