தமிழ்நாடு
எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை! Income tax audit at places owned by E.V.Velu

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் எதிர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் எதிர் கட்சிப் பிரமுகர்களின் வீடுகளில் அவ்வப்போது வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது
எதிர்க்கட்சிகள் மட்டுமே வருமான வரித் துறையால் குறிவைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இதனால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
ஏற்கனவே மக்கள் நீதி மய்யம், திமுக ,மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்கள் வீடுகளில் சமீபத்தில் வருமான வரி சோதனை நடந்த நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

















