இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 18.02.2026

- திருமணம் ஆகாதவர் என்ற சான்று பெறுவதற்கு இனிமேல் விஏஓ, தாசில்தாரை அணுக வேண்டாம். நோட்டரி வழக்கறிஞரிடம் சான்று வாங்கி இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தால் போதும். சான்று பெறலாம் என அரசு உத்தரவு.
- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.90 குறைந்து கிராம் ரூ.14230க்கும் சவரன் ரூ.113840க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.5 குறைந்து கிராம் ரூ.260 க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.260000க்கும் விற்பனை ஆகிறது.
- தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு. திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, செல்வராஜ், ஜி.கே.வாசன், தம்பிதுரை பதவிக்காலம் ஏப்ரல் 2ல் நிறைவு.
- சுங்குவார் சத்திரம் வரையிலான புதிய மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு புர்வாங்க ஒப்புதல் அளித்து ஒன்றிய அரசின் நிதி உதவிக்கு பரிந்துரைத்துள்ளது என இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தகுதிச் சான்றிதழ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 25ம் தேதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்த்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு


