இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 07.02.2026

- செய்முறைத் தேர்வுகள் 9ம் தேதி தொடங்குகிறது. பிளஸ்2 வுக்கு பிப்ரவரி 9ம் தேதி முதல் 14ம் தேதி வரையம் பிளஸ் 1க்கு 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையும் 10ம் வகுப்புக்கு 23ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் நடைபெறும். – பள்ளிக்கல்வித்துறை
- நீட்-பீஜி கட் ஆப் மதிப்பெண் குறைப்பு ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
- எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் காரல்மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்.
- சேலம் வழியே செல்லும் ரயில்களில் நகை பறிப்பு சம்பவங்கள் எதிரொலியாக ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும் ஹோம் சிக்னல்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் கண்காணிப்பு. கொள்ளையர்களை சுட்டுப் பிடிக்க உத்தரவு.
- தமிழ்நாட்டில் பணியிடை நீக்கத்தில் உள்ள 439 போலீசாரில் 202 பேர் நீணட காலமாக பணியிடை நீக்கத்தில் இருந்து வருகின்றனர். பணியில் இல்லாமல் சம்பளம் கொடுக்க வேண்டி உள்ளதால் அவர்களுக்கு பணி வழங்க முடிவு.
- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.170 உயர்ந்து கிராம் ரூ.14420க்கும் சவரன் ரூ.115360க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.5 உயர்ந்து கிராம் ரூ.285க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.285000க்கும் விற்பனை ஆகிறது.
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிப்ரவரி 17ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். – சபாநாயகர் அப்பாவு பேட்டி.
- 80 மற்றும் 90களில் பிறந்த மில்லேனியம்களை விட ஜென்-சி தலைமுறையினர் குறைந்த ஐ-க்யு அளவையே பெற்றுள்ளதால் அறிவாற்றலில் பின்தாங்கி காணப்படுவதாக தகவல்










