இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதவரை – 27.01.2026

- இந்தியாவிலேயே முதன்முறையாக 14 வயது இளம் பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் HPV (Human Papilloma Virus) என்கிற தடுப்புசி திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்தமார். தனியார் மருத்துவமனைகளில் இதற்கு கட்டணம் ரூ.14000. தமிழ்நாடு அரசு கட்டணமில்லாமல் வழங்குகிறது.
- இந்திய – ஐரோப்பிய யுனியன் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் மருத்துவ உபகரணங்களுக்கான வரி முற்றிலும் நீக்கம். மருத்துவ ஆக்சிஜனுக்கான வரியிலும் சலுகை கிடைக்கும்.
- பத்திரப்பதிவுக்கு அசல் ஆவணங்களை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல். பத்திரப்பதிவுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக வில்லங்க சான்று அசல் சான்றை கட்டாயமாக்கம் மசோதா நடைமுறைக்கு வந்தது.
- பொது சாலைகள் தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டுக் கட்டிடங்கள் அமைப்பதை மத உணர்வுகளை காரணம் காட்டி நியாயப்படுத்த முடியாது. – சென்னை உயர்நீதிமன்றம்.
- குதிரை சவாரி குதிரை இனம் சார்ந்த விலங்குகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
- ஜனநாயகன் வழக்கு தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிப்பு. தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ய காவ அவகாசம் வழங்கப்பட்டது. படம் இப்போதைக்கு ரிலீஸ் இல்லை.









