இந்தியா
இனி சென்னையிலும் “ரூஃப்டாப்“ ஓப்பன் பேருந்துகள் !!!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் விதமாகவும் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் விதமாகவும் “ரூஃப்டாப்“ பேருந்துகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சென்னை நகரின் பழைமை மற்றும் வரலாற்றுச் சிறப்ப மிக்க இடங்களின் சுற்றுலாவை மேம்படுத்த சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட “சென்னை உலா“ என்ற திட்டத்தில் இந்த பேருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதற்கான ஒப்பந்த காலம் 12 ஆண்டுகளாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.








