இந்தியா
ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனம் பெங்களுருவில் அலுவலகம் தொடங்கியது.

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான “ஆந்த்ரோபிக்“ நிறுவனம் ஆசியாவில் தனது 2வது அலுவலகத்தை திங்கள்கிழமை அன்று பெங்களுருவில் தொடங்கியது.
“கிளாட்“ என்ற நவீன ஏஐ மென்பொருளை உருவாக்கி புகழ்பெற்ற இந்த நிறுவனம் இந்தியாவில் தனது பயணத்தின் தொடக்கமாக ஏர்இந்தியா, ரேஸர்பே, கிரெட் போன்ற பிரபல நிறுவனங்களுடன் சில ஒப்பந்தங்களை செய்துள்ளது. வெறுமனே வணிக நோக்கம் மட்டும் இல்லாமல் சமூக நல்லிணக்கத்தோடு இந்திய மொழிகளுடன் இணைந்து சேவை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவன இந்திய பிரிவு இயக்குநர் இரினாகோஷ் கூறுகையில் பொறுப்பான முறையில் ஏஐ தொழில்நுட்பத்தை உலகுக்குக் கொண்டு செல்ல இந்தியா ஒரு சிறுந்த .இடமாக இருக்கிறது. என்றார்.
இந்த புதிய ஏஐ கருவிகளின் அறிமுகம் இந்த துறையில் மனித உழைப்பின் தேவையை பெருமளவில் குறைக்கும் என்ற பல்வேறு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தால் அண்மையில் சென்செக்ஸ் மற்றம் நி.ஃடி ஆகியவை ஒரே நாளில் சுமார் 6 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம் போடி வரை இழப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பித்தக்கது.


