ஆன்மீகம்
காதலில் எப்போதும் பிரேக்-அப் செய்யும் ராசிக்காரர்கள் – ஜோதிட ரகசியம்!
Published
9 மாதங்கள் agoon
By
Poovizhi
காதலில் எப்போதும் பிரேக்-அப் செய்யும் ராசிக்காரர்கள் – ஜோதிட ரகசியம்!
காதல் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு அற்புதமான அத்தியாயமாகும். சிலர் சரியான காதலை அடைந்தவுடன் அதை உயிரோடு பற்றிக் கொள்வார்கள், ஆனால் சிலர் தங்களின் பிடிவாதம் அல்லது முட்டாள்தனத்தால் கைக்கு வந்த காதலைத் தவறவிடுவார்கள். ஜோதிடப்படி, ஒருவரின் ராசி அவர்களின் குணநலன்களை நிர்ணயிக்கிறது, அது காதல் உறவிலும் பிரதிபலிக்கிறது.
சில ராசிக்காரர்கள் காதலுக்காக போராடுவார்கள், ஆனால் சிலர் காதலை சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் தான் உறவு முறிவதற்கு பெரும்பாலும் காரணமாக இருப்பார்கள். இங்கே, பிரேக்-அப் செய்வதில் முன்னிலையில் இருப்பவர்கள் யார் என்பதை பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு விரைவான முடிவுகளை எடுப்பவர்கள். அவர்கள் யாருடைய நேரத்தையும் வீணாக்க விரும்ப மாட்டார்கள். உறவில் தங்களை கட்டுப்படுத்துவதாக உணர்ந்தவுடன், சிறிய காரணங்களுக்குப் கூட பிரேக்-அப் செய்து விடுவார்கள்.
துலாம்
சமநிலையை விரும்பும் துலாம் ராசிக்காரர்களும், பொருந்தாத உறவிலிருந்து விரைவில் விலகுவார்கள். தனியாக இருப்பதைப் பற்றி பயப்படாததால், பொருத்தமில்லாதவருடன் இருப்பதைவிட பிரிவதைத் தேர்வுசெய்வார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பழிவாங்கும் குணம் அதிகம் கொண்டவர்கள். காதலில் ஏமாற்றப்பட்டால் மன்னிக்காமல், வெறுப்புடன் உறவை முடிக்க விரும்புவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சுதந்திரத்தை விரும்புபவர்கள். உணர்ச்சிகளால் பாதிக்கப்படாமல், பொருத்தமில்லாத உறவிலிருந்து எளிதாக விலகுவார்கள். அவர்களுக்கு தங்களின் நன்மை முக்கியம் என்பதால், ப்ரேக்-அப்பில் தயக்கம் காட்ட மாட்டார்கள்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

29 ஜனவரி 2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் வேலை, பணம், காதல் பலன்கள்!

22 செப்டம்பர் 2025 ராசிபலன் | இன்று உங்கள் ராசிக்கு என்ன வாய்ப்பு?

செப்டம்பர் 22 – 28, 2025: வார ராசிபலன்கள்!

விருதுக்கு காதலுக்கான நாள்! 2025 காதலர் தின ராசி பலன் – யாருக்கு வெற்றி? யாருக்கு சோதனை?

விருச்சிகம் ராசி: நலமுறு வருமானம், பணியில் சிக்கல்கள் மற்றும் புதிய வாய்ப்புகள்!



















