வணிகம்
இந்தியாவிலிருந்து சீனா, வியட்நாமிற்கு உதிரிபாகங்கள் ஏற்றுமதி ஆரம்பம்!

இந்தியா முதல் முறையாக சீனா மற்றும் வியட்நாமுக்கு ஆப்பிள் உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது. Economic Times செய்தி வெளியிட்ட தகவலின்படி, மாதர்சன் குழுமம், ஜபெல், Aequs மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட ஆப்பிள் வழங்குநர்கள் iPad தவிர மற்ற அனைத்து ஆப்பிள் தயாரிப்புகளுக்கான உதிரிபாகங்களை இந்தியாவில் தயாரித்து, வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
இதுவரை இந்தியா சீனா மற்றும் வியட்நாமிலிருந்து அதிக அளவில் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து வந்தது. ஆனால் தற்போது, ஆப்பிள் உற்பத்தித் துறையில் முன்னேற்றம் அடைந்து, ஏற்றுமதி நாடாக மாறி வருகிறது























