இந்தியா
அதானிக்கு ஆப்பு வைத்த ஹிண்டர்பர்க் நிறுவனத்தின் உரிமையாளர் யார் தெரியுமா? தனிப்பட்ட முறையில் செம லாபம்..!

பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக ரணகளம் ஆகியது என்பதும் குறிப்பாக அதானி நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியதை அடுத்து அந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பங்குச் சந்தையை புரட்டி போடும் அளவுக்கு அதானி நிறுவனங்களின் பங்குச்சந்தை இருந்ததாகவும் புதன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் அதானி நிறுவனங்களின் பங்குகள் 2.3 லட்சம் கோடி சரிந்ததாகவும் கூறப்படுகிறது. நல்ல வேலையாக ஜனவரி 26 ஆம் தேதி பங்குச்சந்தை விடுமுறை என்பதால் அன்றைய தினம் ஏற்பட இந்த நஷ்டம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்ததால் தனிப்பட்ட முறையில் 10 பில்லியன் டாலருக்கு மேல் அவருடைய சொத்து மதிப்பு குறைந்தது என்றும் அது மட்டும் இன்றி 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர் பட்டியலில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதானிக்கு இந்த அளவுக்கு ஆப்பு வைக்க இந்தியாவில் யாரும் இல்லை என்றாலும் அமெரிக்காவில் உள்ள ஹிண்டர்பெர்க் என்ற ஆய்வு நிறுவனம் தான் இந்த வேலையை செய்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரே ஒரு அறிக்கை அதானியின் சாம்ராஜ்யத்தையே நிலைகுலைய வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிண்டர்பர்க் என்ற நிறுவனம் என்பது நாதன் ஆண்டவர்சன் என்பவரால் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இவர் அதன் பிறகு பங்குச்சந்தையில் ஏற்படும் முறைகேடுகளை கண்டுபிடிக்கவே இந்நிறுவனத்தை தொடங்கினார். இவரது நிறுவனத்தின் ஒரே ஒரு அறிக்கையால் சமீபத்தில் வீழ்ச்சி அடைந்த நிறுவனம் நிக்கோலா கார்ப் என்ற நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் 34 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக இருந்த நிலையில் தற்போது அதன் மதிப்பு வெறும் ஒரு 1.3 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை உலகின் 16 முன்னணி நிறுவனங்களின் முறைகேடுகளை கண்டுபிடித்து அந்நிறுவனத்திற்கு ஆப்பு வைத்துள்ள ஹிண்டர்பர்க், தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபரான அதானி நிறுவனங்களின் மீது அவர் கை வைத்துள்ளார்.
பங்குச்சந்தையை பொருத்தவரை ஷார்ட் பொசிஷன் மற்றும் லாங் பொசிஷன் என்ற இரண்டு வகையை வர்த்தகங்கள் உண்டு. ஷார்ட் பொசிசனில் வர்த்தகம் செய்தால் ஒரு நிறுவனத்தின் பங்குகள் இறங்கினால் லாபம், அதேபோல் லாங் பொசிஷனில் வர்த்தகம் செய்தால் ஒரு நிறுவனத்தின் பங்குகள் ஏறினால் லாபம். இதுகுறித்து ஆராய்ச்சியில் இருக்கும் ஹிண்டர்பர்க் நிறுவனம் அதானி நிறுவனம் செய்த முறைகேடுகளை பட்டியலிட்டத்தை அடுத்து தான் இந்திய பங்கு சந்தை ரணகளமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் தவறுகளை கண்டுபிடிப்பதில் சாதனை செய்துள்ள இந்நிறுவனம் அதானிக்கு மிகப்பெரிய ஆப்பு வைத்துள்ளதாகவும் இதிலிருந்து அதானி நிறுவனங்கள் மீண்டு வர மிக அதிக காலம் ஆகும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஹிண்டர்பர்க் நிறுவனத்திற்கு அதானி குடும்பத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்ததால் தனிப்பட்ட முறையில் லாபம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அதானி குழும பங்குகள் மீது ஹிண்டர்பர்க் நிறுவனம் ஷார்ட் பொசிசனை வைத்துள்ளது என்றும் அதனால் அதானி நிறுவனத்தின் பங்குகள் இறங்க இறங்க ஹிண்டர்பர்க் நிறுவனத்தின் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் இது ஒரு தொழிலதிபரை வீழ்த்தி சுயலாபம் அடைவதற்காகவே ஹிண்டர்பர்க் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதா? அல்லது உண்மையாகவே முறைகேடுகளை வெளிப்படுத்த அறிக்கை வெளியானதா? என்ற கேள்வி தான் எழுந்துள்ளது.